பிரியமுடன் ப்ரியா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளரான தேனிசைத் தென்றலின் மகன் ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் இருக்கிறார். அவரது இசையில் நூறாவது படமான பிரியமுடன் ப்ரியா
இப்படத்தை கோல்டன் கலோரி மூவிஸ் ஜே சுஜித்- பானு தயாரிப்பில்
நடிகர் அசோக் குமார் மற்றும் நடிகை லீசா மற்றும் சுரேஷ், ஏ வெங்கடேஷ், தலைவாசல் விஜய், வைகாசி பொறந்தாச்சு ரவி, ஜீவா மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஏஜே சுஜித் இயக்கியுள்ளார்.
அநாதையாக பிறந்தவன் அன்பான குரலுக்கு ஏங்குகிறான். அவ்வாறு ஒரு பெண் குரல் (வானொலி வர்ணனை யாளர்) கேட்கும்பொழுது தன் மனதை பறிகொடுக்கிறான்.அது காதலும் இல்லை, காமமும் இல்லை வேறு என்ன உறவு ? முடிவும் என்ன என்பதே கதை.
ஹீரோ வாக அசோக் குமார் நடித்துள்ளார் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் ஆக திரில்லராக நகர்த்தியுள்ளார். ரேடியோ மிர்ச்சி வேலை செய்யும் ஆர்.ஜேவாக நடிகை லிஷா நடித்துள்ளார் .
தனது இறுதி ப்ரோக்ராம் இருக்கு வரும் நடிகை அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அசோக் செய்யும் காட்சிகள் நம்மை சில நேரம் கோவம் அடைய வைத்தாலும் அவரது மனதையும் நாம் உணர வேண்டும். அசோக் குமார் அனாதையாக சிறுவயதில் இருந்து வாழ்ந்துள்ளார்.
அவரது பிளாஷ்பேக் காட்சிகள் அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும்.
இது பாச சைக்கோ என்றும் கூறலாம் . லீஷா இருக்காக எதையும் செய்வேன் என்பதுதான் இந்த கதாபாத்திரம்.
இதுபோன்ற ரசிகர்கள் இருக்கின்றனர் சிலரது குரலின் பேச்சில் அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவரது குரல் அவரது பாடல் போன்ற வரிகளை கேட்டால் தான் இரவு தூக்கம் வரும் என்று சிலர் நிஜத்தில் கூட வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்பது உண்மை.
பாடல்கள் பிரமாதம்
இசை மற்றும் பின்னணி இசை வேற லெவல் என்று கூறலாம்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் கலக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு அற்புதமாக உள்ளது
எடிட்டிங் நன்றாக உள்ளது.
நடிகர் சுரேஷ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகக் கச்சிதமாக பொருந்தி உள்ளது.
தலைவாசல் விஜய் அவருக்கு கொடுத்த வேலை மிக கச்சிதமாக செய்துள்ளார்.
இயக்குனர் வெங்கடேஷ் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது.
லிஷா மிக அழகாக உள்ளார். மிக எதார்த்தமான நடிப்பு கதை கேட்ப கச்சிதமாக நடித்துள்ளார்.
பிரியமுடன் பிரியா ஒரு பாசப்போர்
ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை