சற்று முன்



சென்னப்ப நாயக்கர் பிறந்தநாள் தான் சென்னை என்று கொண்டாடப்படுகிறது !


சென்னப்ப நாயக்கர் பிறந்தநாள் தான் சென்னை என்று கொண்டாடப்படுகிறது 384 வது சென்னை தினமாக சமூக நீதி சத்ரியர் பேரவை சார்பில் சென்னை வடபழனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில இணை பொது செயலாளர் எஸ் எம் குமார் தலைமையில் சென்னப்ப நாயக்கர் 384 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மேலும் அதனைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சிகளை தெரிவித்துக் கொண்டனர் பின்னர் செய்தியாளரை சந்தித்த மாநில இணை பொது செயலாளர் எஸ் எம் குமார் அவர்கள் தெரிவித்தாவது சமூகநீதி சத்திரியர் பேரவையின் தலைவர் பொன் குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சென்னப்ப நாயக்கர் பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் சென்னப்ப நாயக்கர் பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார் மேலும் சென்னப்ப நாயக்கருக்கு மிக விரைவில் சென்னையில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நம்முடைய தலைவர் இதற்கான முயற்சிகளை செய்து வருவதாகவும் சென்னைக்கு பெயர் வர முக்கிய காரணம் சென்னப்ப நாயக்கர் என்றும் தெரிவித்தார்.

அவருடைய வரலாற்று சிறப்புகளை கொண்டுவர நம்முடைய சமூக நீதி சத்ரியர் பேரவை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் சென்னை பகுதியின் பூர்வீக குடிகள் வன்னியர்களே என்பது வரலாற்று உண்மையாகும் என்று தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் எஸ் எஸ் பி சசிகுமார் தாம்பரம் சீனிவாசன் குணசேகரன் பூமிநாதன் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி நிர்வாகிகள் கமலக்கண்ணன் சீனிவாசன் புலி ஆர் கதிர்வேல் சென்னை நிர்வாகிகள் செந்தில்குமார் உதயசூரியன் லோகேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை