சற்று முன்



தனிஷ்க் நிறுவனத்தின் மிஆ புதிதாக 4 விற்பனை நிலையங்களை திறக்கிறது !


தனிஷ்க் நிறுவனத்தின் மிஆ புதிதாக 4 விற்பனை நிலையங்களை திறக்கிறது !

சென்னையில் விற்பனை நிலையங்களின் விரிவாக்கம் மூலம் தனது செயல்பாடுகளை  மேலும் பலப்படுத்துகிறது.

சென்னை, 24 ஆகஸ்ட் 2023 : இந்தியாவின் மிகவும் நவநாகரீக நகை பிராண்டுகளில் ஒன்றான தனிஷ்க் நிறுவனத்தின் மிஆ [Mia by Tanishq], புனிதமான வரமஹாலட்சுமி வைபவத்தின் போது, தனது சில்லறை வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள சென்னையில் புதிதாக நான்கு தனித்துவம் வாய்ந்த அட்டகாசமான ஸ்டோர்களை தொடங்குகிறது.

முற்றிலும் புதுமையான வேலைப்பாடுகளுக்கும், நவீன வடிவமைப்புகளுக்கும் புகழ் பெற்ற மிஆ, அதன் கலாச்சார அடையாளத்துக்கு பிரசித்தி பெற்ற நகரில் தொடர்ந்து தனது செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது.

பிரமிப்பூட்டும் இந்த நான்கு கடைகளும், ஆழ்ந்த சிந்தனையுடன் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரின் பிரதான இடங்களில் அமைந்துள்ளன. இவை மிஆ ப்ராண்டின் சில்லறை விற்பனை வணிகத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை காட்டும் விதத்தில் அமைந்துள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக் கூடியதாகவும், தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை பெறுவதற்காகவும் மிஆ மேற்கொண்டுள்ள ஈடுபாட்டை அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் அமைந்துள்ளன.

இந்த நான்கு கடைகளும் அமைந்துள்ள பகுதிகள் பின் வருமாறு:


1. Mia by Tanishq, 2/பிசி/ 7/சி, இரண்டாவது பிளாக், முகப்பேர் பிரதான சாலை, முகப்பேர் மேற்கு, சென்னை, தமிழ்நாடு - 600037 (Mia by Tanishq, 2/PC 7/C, Second Block, Mogappair Main Road, Mogappair West, Chennai, Tamil Nadu – 600037)

2. Mia by Tanishq, எண்.97,வேளச்சேரி பைபாஸ் சாலை, வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு - 600042  (Mia by Tanishq, No: 97, Velachery Bypass Rd, Velachery, Chennai, Tamil Nadu 600042)

3. Mia by Tanishq, வீஆர் மால், ஜீ 42ஏ, தரைத்தளம், வீஆர் மால், அண்ணாநகர், சென்னை 600040 (MIA by Tanishq, VR Mall, G 42A, Ground Floor, VR Mall, Anna Nagar, Chennai – 600 040)

4. Mia by Tanishq, எண்.37, பி பிளாக், தரம்நிவாஸ், 2-வது நிழற்சாலை, அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 (Mia by Tanishq, No 37 B Block, DharamNivas, 2nd Avenue Annanagar East, Chennai 600102).

அனைத்து கடைகளையும், டைட்டன் கம்பெனி லிட் நிறுவனத்தின் ஆபரணங்கள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அஜய் சாவ்லா (Mr. Ajoy Chawla, CEO, Jewellery Division, Titan Company Ltd, ), தனிஷ்க் நிறுவனத்தின் மிஆ வர்த்தக பிரிவு தலைவர் திருமதி ஷ்யாமளா ரமணன் (Ms. ShyamalaRamanan, Business Head, Mia by Tanishq), ஆபரணங்கள் பிரிவு தெற்கு, மண்டல வணிக மேலாளர், திரு. நரசிம்மன் (Mr. Narasimhan, Regional Business Manager, Jewellery Division, South) ஆகியோர் அவர்களது வர்த்தக சகாக்களுடன் அந்தந்த இடங்களில் தொடங்கி வைத்தனர். வரமஹாலட்சுமி நோன்பு அனுசரிக்கும் புனிதமான நாளில் புதிதாக திறக்கப்பட்ட நான்கு ஸ்டோர்களின் தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக, மிஆ தயாரிப்புகளுக்கு 20%* வரையிலான தொடக்கவிழா தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. இந்த சலுகையானது 25 ஆகஸ்ட் 2023 தொடங்கி 27 ஆகஸ்ட் 2023 வரையில் மேற்கண்ட நான்கு ஸ்டோர்களிலும் செல்லுபடியாகும்.

இந்த கடைகள் மொத்தம் 3,350 சதுரஅடி பரப்பளவில் மிகவும் பரந்து விரிந்து மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. இவற்றில் ஜொலிக்கும் தங்கம், பிரகாசிக்கும் வைரம், பளபளக்கும் வண்ணமயமான விலையுயர்ந்த கற்கள், மினுமினுக்கும் வெள்ளி என பல்வேறு வடிவமைப்புகளை கொண்ட ஆபரணங்களும், மேலும் பல்வேறு வகையான மிஆ வின் மிக நேர்த்தியானதும் கவர்ச்சிகரமானதுமான நகைகளும் விற்பனைக்கு உள்ளன. தோடுகள் (studs), மோதிரங்கள் (finger rings), கைகாப்புகள் (bracelets) காது வளையங்கள் (earrings), பதக்கங்கள் (pendants), கழுத்தில் அணியும் அணிகலன் (neckwear), மங்கள்சூத்ரா (Mangalsutras) என வாடிக்கையாளர்களின் பல்வேறு வகைப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய பல்வேறு ரக ஆபரணங்களையும் இவை வழங்குகின்றன.

சென்னையில் உள்ள மிஆ ப்ராண்ட்டின் இந்த பிரத்யேக ஸ்டோர்களில் நவநாகரிகமானதும், சமகால வடிவமைப்புகளை கொண்ட மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய 14 காரட் மற்றும் 18 காரட் நகைகளின் பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. இவை தவிர, கூடுதலாக, மிஆ வழங்கும் அதன் சமீபத்திய தொகுப்புகளான, வெறும் ரூ.40,000/- விலையில்  தொடங்கும்  "சாலிடேர்கள் "(Solitaires),  தனித்துவமான “Evil Eye”, “Zodiac” ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் ஈர்க்கும் வகையில் உள்ளன. மாடித் தோட்டங்கள், நகரப் பூங்காக்கள், நகர்ப்புற காடுகளின் அழகின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட “Nature’s Finest” நகைகள், அழகிய “Mamma Mia” தொகுப்புகளுடன் இணைந்து கிடைக்கின்றன. “Mamma Mia” தொகுப்புகள் தாயும் சேயும் உற்சாகமாகவும், ஸ்டைலாகவும் ஒரே மாதிரியாக மகிழ்ச்சியுடன் அணியும் பல்வேறு வகைப்பட்ட நகை ரகங்களை கொண்டதாக அமைந்துள்ளன. மேலும் இந்த கடைகளில், விடுமுறை நாட்களில் உடனடியாக கடற்கரைகளுக்கு பயணிக்க விரும்பும் பெண்களுக்காகவே பிரத்யேகமாக, கடல் அலைகள், சூரியன், சிப்பிகள், மணல் பரப்பு, பனை மரங்கள் ஆகியவற்றின் அழகால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட “Wavemakers” நகை தொகுப்புகளும் விற்பனைக்கு உள்ளன.

டைட்டன் கம்பெனி லிட் நிறுவனத்தின் ஆபரணங்கள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அஜய் சாவ்லா (Mr. Ajoy Chawla, CEO, Jewellery Division, Titan Company Ltd,) திறப்பு விழாவில் பேசுகையில், "டைட்டன் நிறுவனத்தின் நகைப் பிரிவின் முக்கியமான அங்கமாக விளங்கும் தனிஷ்க் வழங்கும் மிஆ பிராண்டானது, புதிய நூற்றாண்டு தலைமுறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒன்றாக திகழ்கிறது. சென்னையில் இன்று புதிதாக 4 ஸ்டோர்களை மிகவும் பெருமையுடன் திறக்கிறோம்.

ஒவ்வொரு மிஆ ஸ்டோரும் துடிப்பான, உற்சாகமான, கவர்ந்திழுக்கக் கூடிய, அட்டகாசமான நகைகளை வழங்குவதுடன், பிராண்டின் இளமை துடிப்பையும், எளிதில் அணுகக் கூடிய தன்மையையும் கொண்டதாக விளங்குகிறது.

பல்வேறு நவநாகரிகமான, இளமையான, பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்கள் ஏராளமாக நிரம்பியுள்ள சென்னை நகரம் மிஆ- ப்ராண்ட்டுக்கு மிகவும் முக்கியமான சந்தையாக திகழ்கிறது. சென்னையில் மிஆ ப்ராண்ட்டின் சில்லறை வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதும், இந்த நவநாகரீக நகரத்தில் பிராண்டை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதும் எங்கள் உறுதிப்பாடாகும்" என்றார்.

மேலும் மிஆ ப்ராண்ட்டின் பல்வேறு வகையான அனைத்து சொந்த தயாரிப்புகள் மீதும் மிஆ வழங்கும் "அதிகம் வாங்குங்கள் அதிகம் சேமியுங்கள்" (Buy More Save More) சலுகையையும் வழங்குகிறது. ஒவ்வொரு 2-வது முறை நகை வாங்கும் போதும் சலுகை காலத்தில் கிடைக்கும் தொடக்க விழா தள்ளுபடியுடன் மேலும் கவர்ச்சிகரமான கூடுதல் தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த சலுகை செப்டம்பர் 4, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

தனிஷ்க் நிறுவனத்தின் மிஆ குறித்து

தனிஷ்க் நிறுவனத்தின் பரம்பரியம் மற்றும் மரபுடன் உருவான மிஆ, உறுதி, நவீனம் மற்றும் புதுபாணி நகைகளின் பிராண்டாகும். இளம் வயதினருக்காகவும், மனதால் இளமையாக உணர்பவர்களுக்காகவும், ஸ்டைலானவர்களுக்காகவும் தனித்துவமான, குறைவான, பலதரப்பட்ட வடிவங்களில் மிஆ ஆபரணங்களை உருவாக்குகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் எந்த சிரமமும் இல்லாமல் தன்னை தயார்படுத்தி கொள்ளும் வகையில் பல்வேறு ரகங்களில் மிஆ நகைத் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 18kt மற்றும் 14kt தங்கத்தில் 1500-க்கும் மேற்பட்ட டிசைன்களை மிஆ உருவாக்கி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.4999/- ஆகும். மிஆவுக்கென 120-க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் உள்ளன. அதோடு தனிஷ்க் ஸ்டோர்களிலும் கிடைக்கின்றன. இவை https://www.miabytanishq.com/  என்ற இணைய தளத்திலும், ஆன்லைன் விற்பனை தளங்களான https://www.amazon.com/  https://www.tatacliq.com/  https://www.flipkart.com/ .ஆகியவற்றிலும் கிடைக்கின்றன.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை