சற்று முன்



ICC ஆடவர் உலகக் கோப்பை 2023க்கு புத்துணர்வூட்டும் வகையில் கோகோ கோலா மற்றும் ICC கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது !


 ICC ஆடவர் உலகக் கோப்பை 2023க்கு புத்துணர்வூட்டும் வகையில் கோகோ கோலா மற்றும் ICC கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது !

சென்னை, ஜூலை 29, 2023: வரவிருக்கும் 2023ஆம் ஆண்டு ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக கோகோ-கோலா மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மீண்டும் இணைந்துள்ளன. ICC மற்றும் பிரபலமான பான நிறுவனத்திற்கு இடையேயான நான்கு ஆண்டு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த அற்புதமான கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டாண்மையின் கீழ் ICC இன் பிரத்தியேக மது அல்லாத பானக் கூட்டாளராக கோகோ-கோலா திகழ்கிறது.

இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுடன் இணைவதற்கும், ஒற்றுமையின் பாரம்பரியத்தை வளர்ப்பதற்கும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாட்டின் மூலம் உண்மையான விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கும், கோகோ-கோலா அதன் பிரத்தியேகமான உலகளாவிய அணுகலைப் பயன்படுத்தும். இது அதன் நுகர்வோருடன் தொடர்ந்து செயலாற்றும் மற்றும் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு ஆர்வத்தை அவர்களோடு இணைந்து எதிரொலிக்கும்.

கோகோ-கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் அர்னாப் ராய் அவர்கள், “ICC கிரிக்கெட் உலகக் கோப்பை நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் நிகழ்வு என்று நாங்கள் நம்புகிறோம். ICC உடனான கூட்டு எங்கள் வாடிக்கையாளர்கள், நுகர்வோர், பிராண்டுகள் மற்றும் கிரிக்கெட்டை ஒன்றிணைக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. எங்கள் பிராண்ட் செயல்பாடுகள் புதுமையான ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை ஈடுபடுத்தும் மற்றும் விளையாட்டு ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்கும்.

2023 ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது, ரசிகர்களுக்கான ஈடுபாடுகள், சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகளை வெல்வதற்கான பிரமோஷன்கள் உள்ளிட்ட பல அற்புதமான பிராண்ட் செயல்பாடுகளை கோகோ-கோலா தனது பானங்களின் போர்ட்ஃபோலியோவுடன் மேற்கொள்ளும்.

2023 இல் இந்தியாவில் நடக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்ற உலகப் போட்டிகளுடன், நான்காண்டு கால ஒப்பந்தத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019 ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ICC ஆண்கள் மற்றும் பெண்கள் T20 உலகக் கோப்பைகள், நியூசிலாந்தில் நடைபெறும் ICC மகளிர் உலகக் கோப்பை 2021 மற்றும் ICC உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து ICC நிகழ்வுகளும் அடங்கும். 

இந்த கூட்டாண்மையானது ICC மற்றும் கோகோ-கோலா இரண்டையும் நீண்ட காலத்திற்கு ஒருங்கிணைத்துள்ளது. கோகா-கோலா நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவின் வலிமை மற்றும் ICC இன் அசைக்க முடியாத கவனம் உலகளவில் விளையாட்டின் தடத்தை விரிவுபடுத்தும் வகையில் உலகளாவிய சில்லறை விற்பனையை இணைக்கிறது.

உலகெங்கிலும் உள்ள உள்ளூர் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் நிறுவனங்களை ஆதரிப்பதில் கோகோ-கோலா உலகளவில் உறுதிபூண்டுள்ளது. கோகோ-கோலா நிறுவனம் ஒலிம்பிக்குடன் எட்டு தசாப்த கால தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, இது FIFA, T20 உலகக் கோப்பையுடன் தொடர்புடையது மற்றும் மக்களை ஒன்றிணைத்து வாழ்க்கையை மாற்ற விளையாட்டின் சக்தியைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸுடன் சமீபத்தில் தம்ஸ்அப் இணைந்திருப்பது, நிறுவனத்தின் விளையாட்டு மீதான நம்பிக்கைக்கும், புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை நோக்கிய அதன் நீண்ட காலப் பயணத்திற்கும் சான்றாகும்.

"ICCயின் தலைமை வர்த்தக அதிகாரி அனுராக் தஹியா அவர்கள், "ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, கிரிக்கெட் நாட்காட்டியின் உச்ச நிகழ்வான, இறுதிப் பெருமைக்காகப் போட்டியிடும் உலகின் சிறந்த அணிகளைக் கொண்டிருக்கும். கோகோ கோலாவுடனான எங்கள் கூட்டாண்மை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புத்துணர்ச்சியூட்டும் கிரிக்கெட் அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறோம். இது, பார்வையாளர்களை வசீகரிக்கும் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளின் பிரமாண்டமான காட்சிப்படுத்தலாகத் திகழும்.

கோகோ-கோலா மற்றும் ICC இணைந்து ஒரு அசாதாரண ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அனுபவத்தை உருவாக்கவுள்ளதால், கூடுதல் தகவல்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை