DD Returns திரை விமர்சனம்!
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டிடி ரிட்டன்ஸ். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனீஸ் காந்த், பெப்சி விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ரோஹித் ஆபிரகாம் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாவது பாகம் என்று கூறப்படுகிறது. தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் ஒரு காலத்தில் பாண்டிச்சேரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா இருக்கிறது. அங்கு சூதாட்டத்தை தொழிலாக கொண்ட ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த சூதாட்டத்த போட்டியில் தோற்பவர்களை அந்த குடும்பம் கொலை செய்து விடுகிறது. இதை அறிந்த அந்த ஊர் மக்கள் அந்த குடும்பத்தினரை எரித்துக் கொல்கிறார்கள். பின் நிகழ்வு காலத்தில் பாண்டிச்சேரி ஊரின் பெரிய மனிதராக பெப்சி விஜயன் இருக்கிறார். இவரிடம் இருந்த பணம், நகை எல்லாமே முனீஸ்காந்த் குழுவினர் கொள்ளை அடிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பிபின் போதை பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் மொத்த பணத்தை மொட்ட ராஜேந்திரன் குரூப் திருட முயற்சிக்கிறது. மறுபுறம் சுரபியை பிரச்சனையிலிருந்து காப்பாற்ற சந்தானத்திற்கு 25 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் தான் பிபின் குழு கொள்ளை அடித்த பண நகையை மொட்ட ராஜேந்திரன் குழுவால் திருடப்படுகிறது. உடனே அந்த பணம் சந்தானம் இடம் செல்கிறது. அதை வைத்த சந்தானம் சுரபியை காப்பாற்றுகிறார்.
இதற்கிடையில் போலீசுக்கு பயந்து தன்னிடம் உள்ள பணம் நகைகளை சந்தானத்தின் நண்பர்கள் ஒதுக்குப்புறமாக உள்ள அந்த பேய் பங்களாவில் போட்டு விடுகின்றார்கள். ஏற்கனவே பேராசை கொண்ட வர்கள்தான் பேயாக அங்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதை அறியாமல் இவர்கள் அந்த பணம் நகைகளை அங்கு போட்டு விடுகிறார்கள். பின் கேம் விளையாடி அந்த பணத்தை வெல்லலாம் இல்லையென்றால் கொல்லப்படும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இறுதியில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் குழு அந்த கேமை விளையாடி பண நகைகளை வெற்றி பெற்றார்களா? இல்லை அந்த பேய்க்கு பலியானர்களா? என்பதே படத்தின் மீது மீதி கதை. வழக்கம்போல் தன்னுடைய நகைச்சுவை பேச்சின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து இருக்கிறார் சந்தானம். அவரை தொடர்ந்து ரெடின், முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் காமெடி எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு பட்டையை கிளப்பி இருக்கிறது.
மொட்டை ராஜேந்தர் வேற லெவல் என்று கூறலாம் அவரது கதாபாத்திரம் மிக அற்புதமாக உள்ளது.
மற்றும் சந்தானத்துடன் நண்பர்களாக வரும் மாறன் கலக்கியுள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன் இப்படத்தில் மிக காமெடியாக நடித்துள்ளார்.
அனைத்து கதாபாத்திரங்களுமே கச்சிதமாக பொருந்தி உள்ளது.
முனீஸ் காந்த் நடிப்பு அற்புதம் மிக நன்றாக நடித்துள்ளார்.
பேயாக வில்லன் கதாபாதிரத்தில் பிரதீப் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு பார்வையாளர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறது. சுரபிக்கு படத்தில் பெரியளவு வேலை இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த வேலையை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார்.
சுரபி மிக அழகாக உள்ளார்.
பொதுவாகவே பேய் படம் என்றால் எந்த ஒரு லாஜிக்கும் பார்த்துக்க கூடாது என்று சொல்வார்கள். அதை எல்லாம் கடந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக வெற்றி கொடுக்கும்.
படம் தொடங்கியதில் இருந்து இறுதிவரை சிரிப்பு சத்தம் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது. ரசிகர்கள் வயிறு குலுங்கி குலுங்கி சிரிப்பார்கள்.
டைமிங் டயலாக்கும் கிளாப்ஸ் வாங்கி இருக்கிறது. பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி போட்டு வரும் காட்சிகள் எல்லாம் வேறலெவல் .
இருந்தாலம் காமெடி சிறப்பாக இருக்கிறது. இசை மற்றும் பின்னணி இசை அற்புதமாக உள்ளது. மொத்தத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் இந்த படத்தின் மூலம் ஒரு சூப்பரான காம்பேக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
ஐ அம் பேக் என்று சந்தானம் கூறலாம்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating: 4 / 5
கருத்துகள் இல்லை