சற்று முன்



ராம் சரணின் 'ரங்கஸ்தலம்'ஜப்பானில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது அமைந்தது !

ராம் சரணின் 'ரங்கஸ்தலம்' ஜப்பான் வெளியிட்டின் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இப்படம் முதல் நாளில் 70 திரைகளில் வெளியிடப்பட்டு 2.5 மில்லியன் யென்( ஜப்பான் நாணயம்) னை வசூலித்தது!!


ஜப்பானில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது அமைந்தது!

'ரங்கஸ்தலம்' படத்தை ஜப்பானின் வெளியிட்ட அதன் விநியோகஸ்தரான ஸ்பேஸ்பாக்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி துரைப்பாண்டியன் டோக்கியோவிலிருந்து 'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றி குறித்து பேசுகிறார். (அதன் காணொளி உள்ளே..)

''ஜப்பானிய மக்களின் இதயத்தில் ராம் சரண் தனி இடத்தை பிடித்துள்ளார். ரங்கஸ்தலம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் இதற்கு உண்மையான சாட்சி.

அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றான 'ரங்கஸ்தலம்'- அதன் நடிப்பு, கதை சொல்லல், இயக்கம் மற்றும் இசை ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது. இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அனைத்து காலகட்டத்திலும் அதிக வசூலை செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது. இந்த படம் இந்திய அளவில் பரவலான வரவேற்பை பெற்றது. பிளாக் பஸ்டர் ஹிட் என்றும் பாராட்டப்பட்டது. இது திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையும் படைத்தது. மேலும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களையும் ஈர்த்தது.

ராம்சரணின் திரையுலக பயணத்தில் 'ரங்கஸ்தலம்' ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் அவர் சிட்டிபாபு என்ற ஒரு பகுதி காது கேளாத மற்றும் நேர்மையான இளைஞனாக தனது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார். இந்த திரைப்படம், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அவரது  பல்துறை திறன்களையும் வெளிப்படுத்தியது. சவாலான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அவரது திறமையும் இப்படம் வெளிப்படுத்தியது. கதாபாத்திரத்தை அவர் சித்தரித்த விதம்,  கதாபாத்திரத்தில் அவருடைய தீவிரத் தன்மை, உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் பாத்திரத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டினை பெற்றார். இந்த படம் முன்னணி நடிகையான சமந்தா ருத் பிரபுவுக்கும் பாராட்டுகளை பெற்று தந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்கு கவர்ச்சியையும், ஆழமான நடிப்பினையும் வெளிப்படுத்தினார். கதைக்குத் தேவையான உணர்வுபூர்வமான அடுக்குகளையும் அவர் இணைத்தார். ராம் சரண் உடனான அவரது கெமிஸ்ட்ரியும் பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றது.

இந்தத் திரைப்படம் ஜப்பானில் ஜூலை 14-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. முதல் நாளில் 70 திரைகளில் 2.5 மில்லியன் யென்களை ஈட்டியது. 'ரங்கஸ்தலம்' படத்தின் ஜப்பான் வெளியிட்டைப் பற்றி அப்படத்தினை ஜப்பானில் வெளியிட்ட ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பான் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி துரைப்பாண்டியன் பேசுகையில், '' ஸ்பேஸ்பாக்ஸ் ரங்கஸ்தலம் திரைப்படத்தை ஜப்பானில் சுமார் 50 கிரங்கு திரையரங்குகளில் வெளியிட்டோம். வரும் வாரங்களில் இன்னும் கூடுதலாக பல திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஜப்பானியர்களின் இதயத்தில் ராம்சரண் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். இதனை இப்படத்தின் வெற்றி நிரூபிக்கிறது. 'ரங்கஸ்தலம்' போன்ற படத்தை ஜப்பானில் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த திரைப்படம் உண்மையிலேயே தலை சிறந்த படைப்பு மற்றும் ஸ்பேஸ்பாக்ஸ்க்கு கிடைத்த பெருமை'' என்றார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களை விநியோகிப்பதற்கான முன்னணி இந்திய திரைப்பட விநியோக நிறுவனமாக ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பானில் உள்ளது. இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்ட 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' வெற்றியை பெற்றது.

'மகதீரா', :துருவா', 'ரங்கஸ்தலம்' போன்ற படங்களின் மூலம் ராம்சரண் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

ஜப்பானில் 'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் ராம் சரணுக்கு மாலை அணிவித்தனர். மேலும் அவரது நடிப்பினை பாராட்டினர். ராம் சரண் இந்திய பின்னணியில் வளர்ந்து வரும் உண்மையான உலகளாவிய நட்சத்திரமாக தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார். 'ரங்கஸ்தலம்' படத்தின் வெளியீடு மற்றும் அதன் வசூல் ஜப்பான் முழுவதும் 'ராம் -மேனியா'வாக சூழ்ந்துள்ளது என்பதனை எடுத்துரைத்திருக்கிறது.


கருத்துகள் இல்லை