விநாயகா மிஷன்ஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனர் தினம் !
விநாயகா மிஷன்ஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனர் தினம் !
தலைமை விருந்தினராக நோபல் அமைதி விருது வென்ற சாதனையாளரான திரு. கைலாஷ் சத்யார்த்தி
இந்த பட்டமளிப்பு விழா நிகழ்வில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 3593 மாணவர்கள் பட்டங்கள் பெற தகுதிபெற்றிருந்தனர்.
93 முனைவர் பட்டங்கள், 94 தங்கப்பதக்கங்கள், 85 வெள்ளிப்பதக்கங்கள், 74 வெண்கல பதக்கங்கள் முதன்மை இடங்களைப் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.
07 ஜுலை 2023: விநாயகா மிஷன்ஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (VMRF DU), அதன் 16வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவையும், நிறுவனர் தினத்தையும் சேலம் சீரகப்பாடியில் அமைந்துள்ள விநாயகா மிஷனின் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லூரியின் அன்னபூர்ணா ஆடிட்டோரியத்தில் இன்று சிறப்பாக நடத்தியது. நோபல் அமைதி விருதை வென்ற திரு கைலாஷ் சத்யார்த்தி, விநாயகா மிஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி. அன்னபூரணி ஷன்முகசுந்தரம், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டத்தோ செரி. டாக்டர். எஸ். சரவணன், அதன் வேந்தர் டாக்டர். ஏ. எஸ். கணேசன் மற்றும் துணை தலைவர் திரு. என். வி. சந்திரசேகர் ஆகியோர் இவ்விழா நிகழ்வுகளில் பங்கேற்ற முக்கிய ஆளுமைகளாவர். மாலை வேளையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த பதினாறாவது பேட்ச் மாணவர்களுக்கு பட்டங்களும் மற்றும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற நோபல் அமைதி விருது வென்ற சாதனையாளரான திரு. கைலாஷ் சத்யார்த்தி, பட்டம் பெற்ற மாணவர்களை பாராட்டி கூறியதாவது: “2023ஆம் ஆண்டில் படிப்பை நிறைவுசெய்து பட்டம்பெறும் மாணவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். புதிய பொறுப்புகளை ஏற்பதிலும் மற்றும் உங்கள் கனவுகளை நிஜமாக்க பயணிப்பதிலும் இணைந்து வருகிற வாய்ப்புகளை தயங்காது ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சிகரமான இத்தருணத்திற்கு உங்களை அழைத்து வந்திருக்கிற பலரின் கூட்டு முயற்சிக்காக உங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள். வரும் காலத்தில் உங்கள் பயணத்தை நீங்கள் தொடரும்போது தைரியமாக மிகப்பெரிய கனவுகளை காணுங்கள்; உங்களது செயல்திறன் சாத்தியத்தை ஆராயுங்கள், உறுதியான நடவடிக்கையை எடுங்கள். சமூகத்தில் நிலவும் நியமங்களையும், வழக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்துவது, அதிரடியான மாற்றத்திற்கான பாதையை அமைத்துத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மிகச்சிறப்பான எதிர்காலத்தை நோக்கிய நமது பயணத்தில் நமக்கு வழிகாட்டக்கூடியவாறு நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களால் நமக்கு தரப்பட்டிருக்கும் தலைமுறைகளைக் கடந்தும் பொருத்தமாக இருக்கிற கொள்கைகளிலிருந்தும், கோட்பாடுகளிலிருந்தும் உத்வேகம் பெறுங்கள்.”
இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் (டாக்டர்) பி கே சுதிர், பட்டமளிப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய மதிப்புமிக்க ஆளுமைகளுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், “அனைத்து பட்டதாரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது குடும்ப வாழ்க்கையிலும் பணி, தொழில் சார்ந்த வாழ்க்கையிலும் மகத்தான வெற்றிபெற வாழ்த்துகிறேன். எதிர்காலம் என்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது; உங்களிடமிருந்து மிக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகா மிஷன்ஸ் பல்கலையில் நீங்கள் கல்வி பயின்ற காலத்தின்போது நீங்கள் வளர்த்துக்கொண்ட நன்னெறி, கருணை மற்றும் தலைமைத்துவ பண்புகளை செயல்படுத்துவதன் மூலம் எங்களை பெருமைப்படுத்துங்கள். பிரபல அறிவியலாளர் லூயிஸ் ஃபாஸ்டரின் பொன்மொழியை நினைவுகூருங்கள், “அறிவியலுக்கு நாடுகள் என்ற எல்லைகளோ, வரம்புகளோ இல்லை; ஏனெனில் அறிவு என்பது முழு மானுடத்திற்கும் சொந்தமானது. உலகிற்கு ஒளி காட்டும் ஒளி விளக்கு இது.” நீங்கள் பெற்றிருக்கும் செழுமையான கல்வி மற்றும் திறன்களைக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்; உலகை ஒளிரச் செய்யுங்கள், நமது பல்கலைக்கழகத்திற்கு புகழையும், பெருமையையும் வழங்குங்கள். உங்களது எதிர்கால முயற்சிகள் அனைத்தையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்,” என்று கூறினார்.
தமிழ் அறிஞரும், தொலைக்காட்சி ஆளுமையும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் எஸ் சாலமன் பாப்பையா அவர்களுக்கு அவரது மகத்தான பங்களிப்பிற்காக கௌரவ முனைவர் பட்டம் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது. பேலியம் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் – தலைவர் மற்றும் வலி தணிப்பு சிகிச்சை மருத்துவரான பேராசிரியர் டாக்டர் எம் ஆர் ராஜகோபால் அவர்களுக்கு இத்துறையில் ஆற்றிய மிகச்சிறப்பான பங்கிற்காக முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை