Zee5 தளத்தில் வெளியான விடுதலை திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது !
Zee5 தளத்தில் வெளியான விடுதலை திரைப்படம் அதிவேகத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது !
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்
”விடுதலை” திரைப்படம் Zee5 தளத்தில் வெளியான குறுகிய காலத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது
தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கிய படைப்பாக கொண்டாடப்பட்ட, RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகானாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை” திரைப்படம், சமீபத்தில் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியானபோதே, இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 28, 2023, Zee5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்று, மிக குறுகிய காலகட்டத்தில் 200 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முத்திரை படைப்புகளை வழங்குவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன்.
அந்த வகையில் அவரது சமீபத்திய வெளியீடான 'விடுதலை பாகம் 1' சமூக அக்கறை கொண்ட படைப்பாக, அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.
தமிழ் திரையில் இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதன்முறையாக இப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் கதைநாயகனாக நடித்துள்ளார். தன் திரை வாழ்வின் முக்கியமான பாத்திரத்தில் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். திரையரங்குகளில் வெளியான பதிப்பில், ரசிகர்கள் காணாத பல முக்கிய காட்சிகளுடன் இயக்குநரின் முழுமையான பார்வையில் அன்கட் வெர்ஷனாக இப்படம் Zee5 தளத்தில் வெளியானது. வெளியான மிக குறுகிய காலத்தில், 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
Zee5 2023 ஆம் ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான திரைப்படங்களை Zee5 வழங்கி வருகிறது. Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது விடுதலை பாகம் 1 திரைப்படமும் இணைந்துள்ளது.
எண்ணற்ற வெற்றிப்படைப்புகளை கொண்டிருக்கும் Zee5 தளம் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. Zee5 உடன் இணைந்திருங்கள் கோடையை கொண்டாடுங்கள்.
கருத்துகள் இல்லை