சற்று முன்



Vimanam திரை விமர்சனம் !


சமுத்திரகனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விமானம். இந்த படத்தில் சமுத்திரகனியுடன், மாஸ்டர் துருவன், ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா, மொட்ட ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சிவ ப்ரசாத் யானலா எழுதி இயக்கி இருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு சரண் அர்ஜுன் இசை அமைத்திருக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் – கிரண் கொரப்பட்டி இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை பார்க்கலாம்.


படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இவர் சென்னை குடிசை பகுதியில் கட்டணக் கழிப்பறை நடத்தி சம்பாதித்து அதில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.  மனைவி இறந்து விடுகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவன் நான்காவது வகுப்பு படிக்கிறான். இவனுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும். சாப்பிடாமல், தூங்காமல் விமான நிலைய காம்பவுண்டில் நின்று கொண்டே விமானங்கள் பிறப்பதை பார்த்து ரசித்து கொண்டிருப்பான்.


அது மட்டுமில்லாமல் விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட்டாக வேண்டும் என பல கனவுகளுடன் சமுத்திரகனியின் மகன் இருக்கிறார். இதை அறிந்த சமுத்திரக்கனி தன் மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்காக எந்த எல்லை வரை செல்லலாம் என்றும் நினைக்கிறார். இறுதியில் சமுத்திரகனியின் மகன் ஆசை நிறைவேறியதா? இதற்காக சமுத்திரக்கனி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை. தந்தை- மகன் பாசப் போராட்ட கதையை மையமாகக் கொண்ட படம். பாசக்கார தந்தை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கட்டண கழிப்பிட தொழிலை நேர்மையாக செய்வது, மாற்றுத்திறனாளிகள் வாகனத்தில் மகனை வாஞ்சையாக அழைத்து செல்வது, மகனுக்காக துடிப்பது, குடும்பத்துக்காக நாள்தோறும் கஷ்டப்படுவது என ஏழை தந்தையாகவே படத்தில் சமுத்திரக்கனி வாழ்ந்து இருக்கிறார்.


இவரை அடுத்து சமுத்திரகனியின் மகனாக வரும் மாஸ்டர் துருவன் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பாவின் கஷ்டங்களை புரிந்து கொண்டு படிப்பில் திறமையாக படிப்பது, தன்னுடைய கனவுக்காக போராடுவது, திறமையாக பார்த்து ரசிக்கும் இடங்கள் என திறமையாக நடித்திருக்கிறார். ரொம்ப ரொம்ப தந்தை- மகன் சென்டிமென்ட் படமாக இருக்கிறது. 


இந்தப் படத்தில் அனுசுயாவின் கவர்ச்சிகரமான கதாபாத்திரம் பிரமாதம். அனுசுயா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

இறுதியில் அனுசுயாவின் வசனங்கள் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. 


மொட்டை ராஜேந்திரன், ராகுல் ராமகிருஷ்ணா செய்யும் காட்சிகள் சிரிப்பு   வருகிறது. 

 சரணின் இசை நன்றாக உள்ளது. குறிப்பாக, பின்னணி இசை  மிக நன்றாக உள்ளது. மேலும், இந்த படத்தில் கவுரவ வேடத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். அவருக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

மிக அழகாக உள்ளார் மீரா ஜாஸ்மின்.

 ஜாதி, பணம், உடல் நலம் போன்ற அனைத்து விதங்களிலும் மாற்றுத்திறனாளி அனுபவிக்கும் கஷ்டத்தை திரையில் இயக்குனர் காட்டி இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால்,அத்தனை பிரச்சினைகளையும் சமுத்திரக்கனி தலையிலேயே கட்டி படம் முழுக்க செல்வதுதான் கொஞ்சம் கடுப்பை ஏற்றிருக்கிறது.  

 திரைக்கதையை சுவாரசியமாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்

தந்தை மகன் பாசப் போராட்டம் தான் விமானம் திரைப்படம்.

ஆக மொத்தத்தில் திரைப்படம் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பார்க்கக்கூடிய திரைப்படம்.


Rating : 3 .5 / 5 


marveltamilnews.com




கருத்துகள் இல்லை