சற்று முன்



போர் தொழில் திரை விமர்சனம் !


 

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் போர் தொழில் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றும் நடிகர் சரத் பாபு நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரியாக லோகநாதன் என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் இருக்கிறார். 

 இவர் ரொம்ப டெரரான ஆள். இவருடைய தலைமையின் கீழ் வேலை செய்பவர் தான் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் ஆனால், இவர் விளையாட்டுப் பிள்ளையாக அதிக புத்திசாலி கொண்ட இளைஞராக இருக்கிறார். இவர் புதிதாக போஸ்டிங் வாங்கி வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் திருச்சியை மையமாக வைத்து ஒரே மாதிரியான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த கொலைகளில் எந்தவித தடயங்களும் இல்லாமல் நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கு அசோக் செல்வன்- சரத்குமார் இடம் வருகிறது. இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் சரத்குமார் கடுமையாக போராடுகிறார். ஆனால், அசோக் செல்வன் விளையாட்டுத்தனமாக கடுப்பேற்றும்படி நடந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் சைக்கோ கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இன்னொரு பக்கம் போலீசுக்குள் இடையில் பாலிடிக்சும் நடக்கிறது. இதையெல்லாம் தாண்டி தொடர் கொலைகளை செய்யும் நபர்களை சரத்குமார் -அசோக் செல்வன் இணைந்து கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு பின்னணி என்ன? என்று சொல்வதே படத்தின் மீதி கதை. படத்தில் லோகநாதன் கதாபாத்திரத்தில் சரத்குமார் மிரட்டி இருக்கிறார். போலீஸ் அதிகாரிக்குறிய கம்பீரத்தில் இருக்கிறார். பிரகாஷ் என்ற இளைஞன் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கிறார்.


சரத்குமார் நடிப்பு பிரமாதம் இன்னும் இளம் வயதில் காக்கிச்சட்டை உடையில் காவல் அதிகாரியாக நடித்த சரத்குமாரை நாம் பார்த்திருக்கிறோம் அதே  கம்பீரத்துடன் இப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சரத் பாபுவின் நடிப்பு பிரமாதம் சிறிது நேரம் வந்தாலும் சரத் பாபு நம் மனதை கவர்ந்து விட்டார்.

இவர்கள் இருவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. விறுவிறுப்பான சைக்காலஜிக்கல் கில்லர் திரில்லர் பாணியில் படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ரொமான்டிக் காமெடி பாணியில் வந்த அசோக்செல்வனுக்கு இந்த படம் சற்று வித்தியாசமான கதாபாத்திரம். பேச தெரியாமல் உயர் அதிகாரியிடம் திட்டு வாங்கினாலும் தன்னுடைய வேலையில் சிறப்பாக செய்திருக்கிறார். அசோக் செல்வனின் திரை வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். நிகிலா விமல் மிக அழகாக இருக்கிறார்.

 முதல் பாதி மிக விறுவிறுப்பாக செல்வது போல் இருந்தாலும் ஆங்காங்கே வரும் சுவாரசியம் படத்தை பார்வையாளர்களின் கவனத்தை இழுத்து செல்கிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும், பின்னணிசையும் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. தேடப்படும்  சைக்கோ கில்லரை காண்பிக்கும் காட்சிகள் எல்லாம் அசத்தலாக இருக்கிறது.

இதுவரை சைக்கோ கில்லர் படங்கள் மீது இருந்த கவனத்தை இப்படம் உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

இப்படம் சைக்கோ கில்லர் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விருந்தாக அமைந்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் இத் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய திரைப்படம்.

Rating : 3 .5 /  5 


Marveltamilnews.com



கருத்துகள் இல்லை