சற்று முன்



காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம் !

 

ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா  என்ற முத்துராமலிங்கம்.

இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருக்கிறார் .

இந்தப் படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்லானி நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு உட்பட பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை பார்க்கலாம்.


தமிழ்ச்செல்வியின் சொத்துக்களை அவருடைய முறை மாமன்கள் அபகரிக்க நினைக்கிறார்கள். இதனால் தமிழ்செல்வியை திருமணம் செய்து கொள்ள முறை மாமன்கள் ஆசைப்படுகிறார்கள். இந்த ஒரு நிலையில் தான் ஆசைப்படுகிறார்கள். காதர் பாட்ஷாவை சந்திக்க ஜெயிலுக்கு செல்கிறார். ஆனால், இந்த சந்திப்பு கை கூடாமல் போகிறது. இதனை தொடர்ந்து தன்னை சந்திக்க வந்ததை அறிந்து கொண்ட காதர் பாட்ஷா தன்னை தேடி வந்த பெண் யார் என்று தெரிந்து கொள்ள செல்வியை தேடி செல்கிறார். அப்போதுதான் மோதல் ஏற்படுகிறது.

அதற்கு பிறகு என்னானது காதர் பாட்சாவிற்கும் செல்விக்கும் என்ன தொடர்பு? செல்வி ஏன் காதர் பாட்சாவை சந்திக்க சென்றார், செல்வியின் சொத்துக்கள் என்னானது. செல்வியுடன் இருக்கும் செல்வியின் அண்ணன் மகள்களின் நிலைமை என்ன என்பதே படத்தின் மீதி கதை.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக பொருந்தவில்லை.  சுமாராகத்தான் நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடம்பு மட்டும்தான் இருக்கிறது தவிர மத்தபடி இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கும் இவருக்கும் சுத்தமாகவே செட்டாகவில்லை.


நடிகர் பிரபு மிக அற்புதமாக எதார்த்தமாக நடித்துள்ளார். மற்றும் சக நடிகர்களின் நடிப்பு இப்படத்தில் பக்க பலமாக அமைந்துள்ளது.

இவரை எடுத்து ஜமாத் தலைவராக நடிகர் பிரபு நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் சில நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வரும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிரட்டலாக இருக்கிறது செல்வியாக சித்திக் இத்தாலி நடித்திருக்கிறார்.பொதுவாகவே முத்தையா படத்தில் பெண்கள் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இந்த  படத்தில் பெண் கதாபாத்திரம் காட்சியை நிரப்பவே பயன்படுகிறது. முதல் பாதியில்   வரும் சண்டைக் காட்சிகள் எல்லாம் தேவையே இல்லை  படம் பார்ப்பவர்களுக்கு படம் பார்ப்பவர்களின் மனநிலையை சோதித்தது என்றே சொல்லலாம்.   இரண்டாம் பாதி கொஞ்சம் நிதானமாக சென்றிருக்கிறது. இஸ்லாம் மற்றும் இந்து மக்களுக்கு இடையேயான பிணைப்பை இயக்குனர் சொன்ன விதம் சிறப்பு. 

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல நட்பு போன்ற காட்சிகள் அனைத்தும் அற்புதம். நன்றாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

ஆனால் கதைக்குள் கதை என்று வைத்திருப்பது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் முத்தையா சொல்ல வந்த கருத்து பார்வையாளர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை என்றே சொல்லலாம் இன்னும் இயக்குனர் கதைக்களத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று சொல்லலாம், 

இசை பக்க பலமாக அமைந்துள்ளது.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது, ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது.  

இயக்குனர் முத்தையா சண்டைக்காட்சிகள் கொடுத்த முக்கியத்துவம் போல் கதைக்களத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் பார்க்க கூடிய திரைப்படம் மதச்சார்பற்ற திரைப்படமாக அமைந்துள்ளது.

Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை