சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் திரை விமர்சனம் !
கணவரை பிரிந்து தனியே வந்த கோமதி ( ஊர்வசி ) தனது மகனுடன் தனியாக வாழ்ந்துவருகிறார், கோமதியின் மகன் ரவிக்கு கண்ணில் ஒரு பிரச்சனை இருக்கிறது, அவருக்கு தனியாக தோழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. கோமதிக்கு தெய்வபக்தி அதிகம் அதனால் அவரின் வீட்டில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டுவருகிறார்.
கோமதி வீட்டில் இருக்கும் விநாயகர் சிலையை பர்வதம் என்ற பெண் பணத்திற்கு கேட்கிறார் , எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக ரவியிடம் சொல்கிறார், ஆனால் கோமதிக்கு இந்த விநாயகர் சிலையை வைத்து ஒரு கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கடைசியில் ரவி விநாயகர் சிலையை விற்று கண் பிரச்சனையை தீர்த்து , தொழில் தொடங்கினாரா ? இல்லையா ? அல்லது கோமதி அந்த சிலையை வைத்து கோவில் கட்டினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
மிக சுவாரசியமாக திரைக்கதை.
கலையரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளார்.
ஊர்வசியின் நடிப்பு பிரமாதம். மிக குறும்புத்தனமான நடிப்பு ஒரு அம்மாவாக கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.
இந்த கதையினை இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கியுள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.
ஆன்மீகத்தையும் தெய்வபக்தியும் கொண்ட படம் நம்பிக்கையும் நிறைந்த படமாக அமைந்துள்ளது.
விநாயகர் கடைசியில் தனது பக்தர்களை கைவிட மாட்டார் என்பது இப்படம் கூறுகிறது.
ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை