சற்று முன்



தண்டட்டி திரை விமர்சனம் !


நடிகர் பசுபதி நடிப்பில் தண்டட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ரோகிணி,  அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'தண்டட்டி' திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா எழுதி, இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.

போலீஸே நுழையக்கூடாது என அடாவடித்தனம் பண்ணும் தேனி பக்க கிராமத்தில் வாழும் தங்கப்பொண்ணு (ரோகிணி), தன் பிள்ளைகள் தொடங்கி ஊரில் உள்ளவர்களுக்கும் நல்லது செய்து, தன் சொத்துக்களை எல்லாம் இழந்து உயிரிழக்கிறார்.

இச்சூழலில், தங்கப்பொண்ணுவின் காதில் இருக்கும் ‘தண்டட்டி’க்காக (தங்கத்தால் ஆன காதணி) இவரது ஐந்து பிள்ளைகளும் அடித்துக் கொள்கிறார்கள். இதனிடையே பணி ஓய்வு பெறவிருக்கும் சூழலில், தொடர் சிக்கல்களில் மாட்டும் போலீஸ் ஏட்டான (சுப்பிரமணி) பசுபதி, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக நடப்பது என்ன? தண்டட்டி யாருக்கு கிடைத்தது?, பசுபதி என்ன செய்கிறார் ஆகிய கேள்விகளுக்கான பதில்களை சிரிப்புடன் கலந்து உணர்வுப்பூர்வமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

முதலில் இப்படத்துக்கு பெரும் பலம் படத்தின் நடிகர்கள்.தண்டட்டியை அடையாளமாக அணிந்து, பிள்ளைகள் தொடங்கி அனைவருக்கும் கரிசனம் காட்டும் கிராமத்து தாயாக ரோகிணி,பொறுப்புடன் வலம் வந்து தேவையான நேரத்தில் சீறும் மிடுக்கான ஏட்டு கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி என இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை ஈர்த்து இருக்கின்றனர்.

பசுபதி மிக அற்புதமாக நடித்துள்ளார் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

அம்மு அபிராமி சிறிது நேரம் வந்தாலும் மிக நன்றாக நடித்துள்ளார்.

நடிகை ரோகினி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். ரோகினியும் பசுபதியும் சந்திக்கும் காட்சி அனைவரும் மனதையும் தொட்டன.

இப்படத்திற்கு காமெடி பக்க பலமாக அமைந்துள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தண்டட்டி நம்மை ஈர்க்கிறது.

 சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது. பின்னணி இசை இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு மிக அற்புதமாக உள்ளது.

கிளைமாக்ஸ் இல் வரும் காட்சி நம் மனதை தொட்டுவிட்டன. காதலில் பிரிந்தவர்களுக்கு இப்படம் நினைவூட்டாக இருக்கும்.

ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 4 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை