மன்னனை மிஞ்சிய மாமன்னன் திரை விமர்சனம் !
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்னன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கௌரவத் தோற்றத்தில் லால் , விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடிங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும் சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக வாழ பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன். இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும் அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் அற்புதமாக சொல்லி இருக்கிறார்.
நடிகர் வடிவேலு அவர்களை நாம் காமெடியனாக பார்த்துள்ளோம்.
இப்படத்தில் ஒரு ஆக்சன் கலந்த நடிகராக ஒரு தந்தையாக ஒரு சமூகத்திற்கு பொதுநலவாதியாக மிக அற்புதமாக நடித்துள்ளார். இது வடிவேலா என்று ஆச்சரியப்படற அளவுக்கு கதைக்கு ஏற்ப கதாபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார் நடிகர் வடிவேலு.
படத்தில் சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் பகத் பாஸில் இருக்கிறார். இவர் ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர். அந்த கட்சியில் எம்எல்ஏ ஆக இருப்பவர் வடிவேலு கட்சியில் இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர். வடிவேலுவின் மகன் தான் உதயநிதி ஸ்டாலின். மேலும், உதயநிதி இடத்தில் கீர்த்தி சுரேஷ் இலவசமாக கல்வி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதை பகத் பாஸில் அண்ணன் உடைத்து சேதாரம் செய்கிறார்.
இதனால் இந்த விவகாரம் பகத் பாஷிலிடம் செல்கிறது. அப்போது இரு தரப்பினர் மத்தியிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், வடிவேலுக்கு சரிசமமான அங்கீகாரமோ மரியாதையோ கொடுக்கவில்லை. இதனால் சரிசமமான கோபப்படுகிறார். பின் பகத் பாசிலை அவர் அடிக்கிறார். இதனால் கட்சியில் பெரும் பிரச்சனை எழுதுகிறது. பின் பகத் பாஸில் வேறு கட்சிக்கு செல்கிறார். அந்த நேரம் பார்த்து சட்டசபை தேர்தல் வருகிறது.
சமூகநீதி சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக வடிவேலு தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து பகத் பாஸில் தலைமையில் ஒருத்தரை நிற்க வைக்கிறார்.. இறுதியில் இந்த தேர்தலில் வடிவேலு வெற்றி பெற்றாரா? இந்த வர்க்கத்தின் மனநிலை என்ன? எல்லோருக்கும் சமமான உரிமை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. முதல் பாதி மிரட்டலாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் மிக வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் போக கதை செல்கிறது . திரைக்கதை அற்புதமாக உள்ளது. எந்த ஒரு காட்சியும் யூகிக்க முடியவில்லை மிக சுவாரசியமாக கதை சென்றடைகிறது.
பகத் பாசில் நடிப்பு பிரமாதம். சண்டைக் காட்சிகள் அனைத்தும் மிக அற்புதமாக நடித்துள்ளார்.
படத்தில் வசனங்கள் எல்லாம் அனைவர் மனதிலும் நிற்கிறது என்று சொல்லலாம். மிக அற்புதமான வசனங்கள். கீர்த்தி சுரேஷிற்கு மிகக் கச்சிதமாக கதாபாத்திரம் அமைந்துள்ளது. தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இதுவரை நாம் பார்த்த கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் புதிய தோற்றத்துடன் அழகாக உள்ளார்.
தந்தை மகன் பாச போராட்டம் போன்ற காட்சிகள் நம் மனதை தொட்டுவிட்டன. வடிவேலும் உதயநிதி ஸ்டாலினும் தந்தை மகனாக வாழ்ந்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பு பிரமாதம் மிக எதார்த்தமாக நடித்துள்ளார்.
படம் முழுவதையும் பகத் பாசிலும், வடிவேலுவும் தான் சுமந்து சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தினுடைய கதைகளமும், கொண்டு சென்ற விதமும் சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். பாடல்கள் படத்திற்கு மிகப் பக்க பலமாக அமைந்துள்ளது. ஒரு அழுத்தமான கதைக்களத்தை சிறப்பாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தின் தலைப்பு மாமன்னன் படத்தை மாமன்னனாக நிருபவித்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனருக்கு ஹட்ரிக் வெற்றி என்று கூறலாம்.
ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 4.5 / 5
கருத்துகள் இல்லை