சற்று முன்



வீரன் திரை விமர்சனம் !


 ஹிப்பாப் ஆதி நடிப்பில் வீரன்

இப்படத்தில் ஹீரோவாக ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் மேலும் இந்த படம் மரகத நாணயம் போல பெரிய ஹிட் கொடுத்த படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் வீரன் படத்தை இயக்கியதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் ஹிப் ஹாப் ஆதியை சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் வெளியாகி இருக்கும் வீரன் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

படத்தின் தொடக்கத்தில் கதாநாயகன் குமரன் கதாபாத்திரத்தில் வரும் அதி வீரனூரில் சிறுவயதில் மின்னலால் தாக்கப்படுகிறார். இதனால் சுயநினைவை இழந்த ஆதியை மருத்துவமனையில் சேர்க்க அங்கிருந்த மருத்துவர்கள் ஆதியை வேண்டுமானாலும் ஆதிக்கு சுயநினைவு வரலாம் என்று கூறுகின்றனர். இதனையடுத்து அவருடய ஆதியுடைய அக்கா அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்கிறார். பின்னர் சுயநினைவு வருகிறது.அப்படிப்பட்ட நிலையில் தான் தன்னிடம் மின்னலின் சக்தி இருப்பதை ஆதிக்கு தெரிய வருகிறது.

அந்த சக்தியை சோதித்து பார்க்கும் ஆதி 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனுருக்கு வருகிறார். அந்த நேரத்தில் வில்லன் 2000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஆபத்தான திட்டத்தை 2000 கோடி ரூபாய் செயல்படுத்த விரும்புகிறார். அந்த திட்டத்தினால் அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆதிக்கு தெரியவருகிறது. இந்நிலையில் அதற்கு பிறகு என்ன நடந்தது? வில்லனை எப்படி அதி எதிர்கொண்டார்? அங்குள்ள மக்களை காப்பாத்தினரா? என்பதுதான் கதை.

இப்படத்தில் பாடல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை.

ஹிப்ஹாப் ஆதி மியூசிக் டைரக்டர் , பாடகர் அவர் படத்திற்கு பாடல்கள் சரியில்லை . கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஊரின் காவலாக இருக்கும் சாமியே ஹீரோவாக வந்தால் எப்படி இருக்கும் கான்சப்டை கொண்டு  இயக்கியுள்ளார் ஏ.ஆர்.கே.சரவணன். இப்படத்தில் ஹீரோவாக வரும் ஆதி வீரனாகவும், குமாரனாகவும், ஹீரோவாக நடிக்கிறார். அவருடைய நண்பன் கதாபாத்திரத்தின் நடிப்பும் பிரமாதம். காமெடிக்காக வரும் முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் காமெடியால் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது. 

ஆனால் வில்லனாக குறைவாக காட்சிகளில் மட்டுமே வரும் வினய்க்கு இன்னமும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் .

இவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இருந்த போதிலும் இரண்டாவது வில்லனாக வரும் பத்ரி பின்னிவிட்டார். இரண்டாவது போல படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடைய வேலையே சரியாக செய்துள்ளனர். குறிப்பாக வீரனை மட்டுமே நம்பும் பெரியவரின் நடிப்பு பிரமாதம். எடிட்டிங், கலை, ஒளிப்பதிவு அணிதிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது படக்குழு. கதைக்களத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பல வெற்றி படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இது போன்ற கதைகளை தேர்வு செய்து தோல்வியடைகிறது.


இயக்குனர் நிறைய ஹாலிவுட் படங்களை பார்த்துவிட்டு மார்வெல் ஸ்டுடியோஸ் இன் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஸ்டார்களை போல தான் ஒரு தமிழில் ஒரு புதிய சூப்பர் ஹீரோவை அறிமுகம் படுத்தியுள்ளார் இயக்குனர் சரவணன்.  


மொத்தத்தில் திரைப்படம் பெரிதாக ஒன்றும் இல்லை.


Rating : 2 / 5 



கருத்துகள் இல்லை