ரெஜினா திரை விமர்சனம் !
சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெஜினா. இந்த படத்தை மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சதீஷ் இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை சதீஸ் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ரித்து மந்திரா, ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, சாய் தீனா, நிவாஸ் அதிதன், விவேக் பிரசன்னா என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
எவ்வளவோ போராடியும் ரெஜினாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இனி சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கொலை குற்றவாளர்களை கண்டுபிடித்து அவர்களை பழித்தீர்க்க திட்டம் தீட்டுகிறார் ரெஜினா. இந்த திட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தில் மீதி கதை. ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் சுனைனா நடித்திருக்கிறார். படம் முழுவதுமே அவர் தான் சுமந்து சென்றிருக்கிறார்.
சுனைனா நடிப்பு பிரமாதம் சோலோ பர்பாமன்ஸ் கலக்கியுள்ளார்.
கவர்ச்சியாக அழகாக இருக்கிறார்.
மேலும், பழிவாங்கும் கதையை திரில்லர் பாணியில் சுவாரசியமாக கொடுக்க இயக்குனர் போராடி இருக்கிறார். ஆனால், அந்தப் போராட்டம் பார்வையாளர்கள் மத்தியில் வெற்றி பெற்ற இருக்கிறது என்று சொல்லலாம். படத்தில் சுனைனா படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் இயக்குனர் சிறப்பாக காட்டியுள்ளார். ஆனால்,
ஆக மொத்தத்தில் ஆக்சன் திரில்லராக அமைந்துள்ளது.
ஆக்சன் திரைப்பட ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்துள்ளது.
அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை