சற்று முன்



ஆழ்வார்பேட்டை - காவேரி மருத்துவமனையில் நவீன ரோபோட்டிக் அறுவைசிகிச்சை செயல்திட்டம் அறிமுகம் !

ஆழ்வார்பேட்டை - காவேரி மருத்துவமனையில் நவீன ரோபோட்டிக் அறுவைசிகிச்சை செயல்திட்டம் அறிமுகம்  !

சென்னை: தமிழ்நாடு – தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு துறைகளுடன் சுகாதார சேவையை வழங்குவதில் முதன்மை வகிக்கும் ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனை, காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக் சர்ஜரிஸ் என்ற பெயரில், ரோபோக்களின் உதவியுடன் துல்லியமான அறுவைசிகிச்சைகள் செய்யப்படும் திட்டம் தொடங்கப்படுவதை பெருமையுடன் அறிவிக்கிறது.  தமிழ்நாடு மாநிலத்தில் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைக்காக முதன் முதலாக ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதையும் இப்பிரிவின் தொடக்கம் குறிக்கிறது.  உலகளவில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய மிக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பமே இங்கும் பயன்படுத்தப்படுவதால் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் வழிமுறையை இந்த புதிய முன்னெடுப்பு திட்டம் புரட்சிகரமானதாக மாற்றும்.  

இரைப்பைக் குடலியல், கல்லீரல் – கணை – பித்தப்பை அறுவை சிகிச்சை, சிறுநீர் பாதையியல், புற்றுநோயியல், இதய அறுவைசிகிச்சையியல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை ஆகிய துறைகளில் ரோபோ சாதன உதவியுடன் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளில் உயர்திறனும், சிறப்பான அனுபவமும் கொண்ட திறமையான அறுவைசிகிச்சை நிபுணர்களை ஒரு அமைவிடத்தின் கீழ், காவேரி மருத்துவமனையின் ரோபோட்டிக் சர்ஜரி ஒருங்கிணைக்கிறது.  குறிப்பாக, சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை மற்றும் உயிருள்ள நபர்களிடமிருந்து கல்லீரலை தானமாக பெறுவதற்கான அறுவைசிகிச்சைகள் ஆகியவற்றில் மிகத் துல்லிய சிகிச்சை மிகக் குறைவான ஊடுருவல் மற்றும் நவீன அறுவைசிகிச்சை பராமரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.  

இந்த புதுமையான செயல்திட்டத்தின் மையமாக டா வின்சி என்ற பெயரிலான நான்காவது தலைமுறை ரோபோட்டிக் சிஸ்டம் இடம்பெறுகிறது.  இதற்கு முன்பு இருந்திராத மிகச்சிறப்பான துல்லியம் மற்றும் 3D விஷன் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களுக்காக மருத்துவ உலகில் மிகப்பிரபலமாக இந்த சாதன அமைப்பு உயர் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.  நிகரற்ற தெளிவுடன் மிக நுட்பமான இரத்தநாளங்கள் மற்றும் திசுக்களிலும் கூட அகக்கண் வழியாக காண்பதற்கான காட்சியாக்கல் திறனை இந்த மேம்பட்ட சாதனம் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு வழங்குகிறது.  மேலும், அறுவைசிகிச்சை நிபுணர்களது கைகளால் எட்டுவதற்கு அதிக சவாலாக இருக்கின்ற உடற்பகுதிகளை எளிதில் அணுகும் வகையில் இந்த ரோபோ சாதனத்தின் கைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சிறப்பான அறுவைசிகிச்சை பலன்கள் கிடைக்கப்பெறுவதை இது உறுதி செய்கிறது.  ஓவியர், சிற்பி, கட்டிடக்கலைஞர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கிய அறிவியலாளர், பொறியியல் நிபுணர் என பல்வேறு பரிமாணங்களை கொண்ட இத்தாலிய வல்லுனரான லியோனார்டோ டா வின்சி (கி.பி. 1452- 1519) என்பவரின் பல்வகைத் திறன்களுக்கு, அதே பெயரை தாங்கியிருக்கும் இச்சாதனம் அஞ்சலி செலுத்துகிறது.  

“அதிக சிக்கலான அறுவைசிகிச்சைகளில் சிறப்பான விளைவுகளை எட்டுவதற்கு உதவ, ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை எமது அறுவைசிகிச்சை செயல்முறைகளில் பயன்படுத்துவது ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும்.  காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக் சர்ஜரிஸ் வழியாக HD கேமராக்கள் வழியாக இதற்கு முன்பு சாத்தியமில்லாத சிறப்பான துல்லியம் மற்றும் காட்சிப்படுத்தல் திறன்களை இப்போது எங்களால் பெற முடியும்.  மனித கைகளுடன் ஒப்பிடுகையில், இந்த ரோபோ சாதனத்தின் கைகள் இன்னும் உயர்வான கோண நகர்வுத்திறன்களை கொண்டிருக்கின்றன.  மிக சிக்கலான சூழ்நிலைகளிலும் கூட, துல்லியமான, பாதுகாப்பான அறுவைசிகிச்சையை மருத்துவர்கள்  செய்ய இந்த செயல்முறை உதவியாக இருக்கும்.  வழக்கமான அறுவைசிகிச்சை அணுகுமுறைகளுடன் ஒப்பிடுகையில், குறைவான வலி, தழும்புகள் ஏற்படாமை, குறைந்த நாட்களே மருத்துவமனையில் தங்கும் அவசியம், பாதிப்பிலிருந்து விரைவில் மீட்சி மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒருசில நாட்களுக்குள்ளேயே இயல்பு நிலைக்குத் திரும்புதல் போன்ற எண்ணற்ற ஆதாயங்களை ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்குகின்றன.  உயிருள் தானமளிப்பவரிடமிருந்து கல்லீரலைப் பெறும் அறுவைசிகிச்சைகளிலும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.  அதுமட்டுமன்றி, ரோபோ உதவியுடன் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையை வழங்கும் தமிழ்நாட்டின் ஒரே மருத்துவ மையமாகவும் நாங்கள் இருப்பதை இங்கு பெருமிதத்துடன்  குறிப்பிட விரும்புகிறேன்,” என்று காவேரி குழும மருத்துவமனைகளின் பல்வேறு உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். சாமிநாதன் சம்பந்தம் கூறினார்.  

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகள் பிரிவில் ஆராய்ச்சியும், மேம்பாடும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றன.  அறுவைசிகிச்சைகளை புரட்சிகரமானதாக இது மாற்றும் என்பது நிச்சயம்.  இருப்பினும், ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு சரியான நிபுணத்துவம் அவசியம்.  மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்க அத்தகைய திறனை அதிகளவில் கொண்டிருக்கும் அனுபவம் மிக்க அறுவைசிகிச்சை நிபுணர்களை நாங்கள் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  ரோபோட்டிக் அறுவைசிகிச்சை செயல்திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் அனைவரும் பயன்படுத்தும் வகையில் குறைவான செலவில், மிக நவீன அறுவைசிகிச்சை தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.  கட்டுபடியாகக்கூடிய சரியான கட்டணத்தில், மிகச்சிறப்பான சிகிச்சை என்ற எமது குறிக்கோளை செயல்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இப்புதிய பிரிவின் தொடக்கம் இருக்கும்” என்று கூறினார். 

தொடக்க விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி “சுகாதாரத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மக்களின் உயிரைக் காப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொறியியல் மற்றும் மருத்துவ நிபுணத்துவத்தின் கூட்டு செயல்பாடு ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற விதிவிலக்கான தீர்வுகளுக்கான பாதைகளைத்  திறந்துவிடுகிறது என்றார். அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் அறிவாற்றல் மிக்க மருத்துவர்களை கொண்ட காவேரி மருத்துவமனை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. சென்னை ஐஐடியில் உள்ள ஆராய்ச்சிப் பிரிவுடன் இணைந்து, காவேரி மருத்துவமனை, மருத்துவப் பாதுகாப்பில் மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டுவரத் தயாராக உள்ளது என்ற அவர்  இதற்கான விரிவான திட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று கூறினார். அனைவருக்கும் கிடைக்கக்கூடிய  , நம்பகமான மற்றும் சிறந்த அறுவை சிகிச்சைகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள காவேரி ரோபோடிக் அறுவைசிகிச்சைக்கான காவேரி இன்ஸ்டிடியூட்  துவக்க விழாவில் காவேரி மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Marveltamilnews.com


கருத்துகள் இல்லை