சற்று முன்



கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரின் இரு கால்களையும் உடைத்த மனைவி... சின்னத்திரை நடிகருக்கு நேர்ந்த சோகம் !


கள்ளக்காதலுடன் சேர்ந்து  கணவரின் இரு கால்களையும் உடைத்த மனைவி...

 சின்னத்திரை நடிகருக்கு நேர்ந்த சோகம் !

சன் டிவி, விஜய் டிவி போன்ற சின்னத்திரையில் மிகப் பிரபலமான காமெடி நடிகரும், "கலக்கப்போவது யாரு" "அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சிகளில் தனது பன்முகத்திறமையால் தரமான காமெடி செய்ததன் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் வெங்கடேஷ் ஆறுமுகம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:45 மணி அளவில் தனது காரில் அவரும், அவரது டிரைவரும் சென்று கொண்டிருந்தபோது வழியில் மூன்று நபர்கள் வழிமறித்து டிரைவரை மிரட்டி, அங்கிருந்து ஓட செய்துவிட்டு, வெங்கிடேசை காருடன் கடத்தி சென்று, ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, அவரை காரில் இருந்து கீழே இறக்கி கதற, கதற அடித்து, உதைத்து இரண்டு கால்களையும் அடித்தே  உடைத்து உள்ளார்கள் அந்தக் கொடும் பாவிகள்.

இந்த நிலையில் காரில் இருந்து இறங்கி ஓடிய டிரைவர் மோகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். வெங்கடேசை பார்த்து கதறி அழுவது போல் பாசாங்கு செய்த டிரைவர் காவல்துறை உதவியோடு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 

அதன் பிறகு போலீசாரின் தீவிர விசாரணையில் வெங்கடேசனின் கார் டிரைவர் மோகன் தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்தது.

இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக வெங்கடேசனின்  மனைவி ஈடுபட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேசனின் டிரைவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள நட்பு  அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜகவை பற்றி ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருந்ததால் பாஜாகவினர் வெங்கடேசிற்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கார் டிரைவர் மோகன் மற்றும் வெங்கடேசனின் மனைவி, அவரது அக்கா மகன் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து கூலிப்படையினரை ஏற்பாடு செய்து வெங்கடேசின் கால்களை உடைத்து விட்டு, அந்த இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை வீசி சென்றால் இந்த வழக்கு பாரதிய ஜனதா கட்சியினருக்கு அவ பெயரை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில் இந்த நாடகத்தை நடத்தி உள்ளார்கள்.

போலீஸாரின் தீவிர விசாரணைக்கே பின் உண்மை குற்றவாளிகளான வெங்கடேசின் மனைவி மற்றும் அவருடைய டிரைவர் மோகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கால்களை உடைத்த சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Marveltamilnews.com


கருத்துகள் இல்லை