Music school திரை விமர்சனம் !
மியூசிக் ஸ்கூல்" பாப்பா ராவ் பிய்யாலா எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை இளையராஜா. இந்த படத்தில் ஸ்ரேயா, ஷான், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், மங்களா பட், சுஹாசினி முலே, பெஞ்சமின் கிலானி, கிரேஸி கோஸ்வாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கோவா-வில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக வேளைக்கு சேர்கிறார் கதையின் நாயகி மேரி ( ஸ்ரேயா ) , இங்கு வந்து பார்த்தால் பள்ளியில் படிப்புக்கு மட்டும் தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் , மற்ற அணைத்து கலைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காததால், அவரின் வீட்டிலேயே மியூசிக் ஸ்கூல் தொடங்குகிறார்.
சில குழந்தைகள் மியூசிக் ஸ்கூல்-ல் வந்து சேருகின்றனர், பிறகு இவர்கள் சவுண்ட் ஆப் மியூசிக் என்ற நாடகம் போட முடிவு எடுக்கின்றனர், அதற்காக பயிற்சி எடுக்கும் போது பல தடங்கல்கள் வந்துகொண்டே இருக்கிறது , அதனால் பயிற்சி எடுக்க முடியவில்லை , பிறகு கதாநாயகியின் ஊரான கோவாவிற்கு சென்று பயிற்சி எடுக்க முடிவெடுத்து, அங்கு செல்கின்றனர் , அங்கு பயிற்சியை முடித்து இவர்கள் நினைத்தபடி சவுண்ட் ஆப் மியூசிக் நாடகத்தை அரங்கேற்றினார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை
பிரகாஷ்ராஜ் நடிப்பு பிரமாதம் ஒரு காவல் அதிகாரி யாக நடித்துள்ளார் ஒரு தந்தையாக வாழ்ந்துள்ளார்.
ஸ்ரேயா பாடலாசிரியராகவே மாறியுள்ளார் இப்படத்தில் குழந்தைத்தனமான பேச்சு மாணவர்களுக்கு இணையாக துள்ளல் நடிப்பு எல்லாரும் மனதையும் கவர்ந்து உள்ளார்.
இளையராஜா இசையும் இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ஆனால் பாடல்கள் அதிகமாக இருப்பதினால் கொஞ்சம் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இசை பள்ளி மாணவ மாணவிகளாக நடித்திருக்கும் இளம் வயதினரும் சிறுவயதினரும் எந்தவித தயக்கமும் இன்றி நடிப்பிலும் நடனத்திலும் அசத்தியுள்ளனர்.
மாணவர்களை கல்வி மதிப்பெண் எடுக்கும் மட்டும் தான் என்று பார்க்கக் கூடாது என்ற வழக்கமான மெசேஜை பெற்றோர்களுக்கும் இளம் வயதில் வரும் காதல் போன்ற அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படித்து முடித்துவிட்டு மற்ற விஷயங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்ற மற்றொரு வழக்கமான மெசேஜை மாணவர்களுக்கு சொல்லி இருக்கும் படம் தான் மியூசிக் ஸ்கூல்.
ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை