தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு" திரைப்படம் !
தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு" திரைப்படம் !
ஒரு கிராமத்தில் கரண்ட் பாக்ஸில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் குருவி குஞ்சு பொரித்து பறக்கும் வரை கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத்தை தழுவி தயாராகும் திரைப்படம் "கூடு" இத்திரைப்படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது இதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார் கதை திரைக்கதையை டேவிட் வில்லியம்ஸ் எழுத, M கணேஷ் மற்றும் கண்ணன் P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ஃபர்ஸ்ட் லுக்கில் நட்சத்திரங்களின் முகங்கள் எதுவுமின்றி 'கூடு என்ற டைட்டில் மட்டும் வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை