சற்று முன்



ஃபர்ஹானா திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக  ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஃபர்ஹானா. இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார் ஃபர்ஹானா. எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி, குக் வித் கோமாளி சக்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பல எதிர்ப்புகளுக்கு மீறி இன்று வெளியாகி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மதக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இஸ்லாமிய குடும்பத்தில் இருக்கிறார். இவருடைய கணவர் படிக்காதவர். இவர் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என நினைக்கும் மனநிலையை உடையவர். செல்லக்கூடாது குழந்தைகளை எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், தன்னைப் போல தன் குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நினைக்கிறார்.

ஐஸ்வர்யா தாத்தா இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் தான் இப் படத்திற்கு ஒரு ஹைலைட் என்று கூறலாம்.

இன்னொரு பக்கம் இவர்களுடைய குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்கு போக முடிவு எடுக்கிறார். பின் அவர் கணவனின் முடிவு உடன் தன்னுடைய தோழியின் உதவி மூலம் தனியார் வங்கியில் கால் சென்டரில் வேலைக்கு செல்கிறார். அதனால் அந்த குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறது. ஒரு கட்டத்தில் தன் தோழிகளைப் போல அதிக சம்பளம் கிடைக்கும் வேறொரு பிரிவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுகிறார்.

ஆனால், அங்கு அவருக்கென்று ஒரு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது .அதில் இருந்து அவர் எப்படி வெளி வருகிறார்? பிரச்சனையை ஐஸ்வர்யா ராஜேஷ் கணவர் எப்படி கையாண்டார்? ஐஸ்வர்யா இவருடைய வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. மதக்கட்டுப்பாட்டுகளுடன் தந்தை, கணவன், குடும்பம் என்று வாழும் ஒரு இஸ்லாமிய பெண்ணின் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இயக்குனர் படத்தை எடுத்திருக்கிறார்.

ஃபர்ஹானா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களுடைய மனநிலை, எதிர்பார்ப்பு, நியாயமான ஏக்கம் போன்ற பலவற்றையும் அவர் அழகாக சொல்லி போன்ற அது மட்டும் இல்லாமல் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்திய கதையாக நகர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கதையை கிரைம் திரில்லாக இயக்குனர் கையாண்டு விதம் சிறப்பு. இருந்தாலும் சில காட்சிகளை இயக்குனர் விறுவிறுப்பாக காண்பித்திருக்கலாம்.

செல்வராகவன் நடிப்பு பிரமாதம் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை எதார்த்தமாக நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். இத்திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கணவராக ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கிறார். அவரும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் நடிகர்களை தவிர தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. இருந்தாலும், படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கிறது. அந்த வகையில் கால் சென்டர் இடத்தை படத்தில் அதிகமாக காண்பித்து இருக்கிறார்கள். இதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் முழுமை அடையாதது போல இருக்கிறது. ஒரு சுமாரான படமாக இருக்கிறது. 

ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய படம்.

Rating :3 /



கருத்துகள் இல்லை