தென் சென்னையில் காவேரி மருத்துவமனை குழுமம் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையினை துவங்குகிறது!
தென் சென்னையில் காவேரி மருத்துவமனை குழுமம் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையினை துவங்குகிறது!
சென்னை: 8 மே 2023: காவேரி மருத்துவமனை குழுமம், சென்னையில் தனது இரண்டாவது மருத்துவமனையை, கோவிலம்பாக்கம் ரேடியல் சாலையில் தொடங்குவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. 250 படுக்கை வசதி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அனைத்து வயதினருக்கும் தேவையான நவீன மருத்துவ வசதிகளை கொண்ட ஒரு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மூளை – நரம்பியல், தண்டுவட பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, குடல் இரைப்பை பிரிவு, சிறுநீரக பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு, விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை பிரிவு, ஆகிய பிரிவுகளில் உயர்தர சிறப்பு மையங்களை (Centers of Excellence) 24/7 வழங்க உள்ளது.
75 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 20 படுக்கை வசதிகள் கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கான (NICU) சிறப்பு பிரிவு, நவீன கேத் லேப் மற்றும் அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்களைக் கொண்டுள்ளது. நோயறிதலுக்கான துல்லியமான திறன்களைக் கொண்ட 3-டெஸ்லா எம்ஆர்ஐ மற்றும் 128-ஸ்லைஸ் சிடி உட்பட நவீன இமேஜிங் சேவைகளை 24 மணி நேரமும் இம்மருத்துவமனை வழங்குகிறது.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர். எஸ். சந்திரகுமார், இது குறித்து கூறியதாவது: தென்னிந்தியாவில் மக்களின் பெருநம்பிக்கையைப் பெற்றிருக்கும் காவேரி மருத்துவமனை, அனைத்து தரப்பினருக்கும் நம்பகமான மருத்துவ சேவையினை தொடர்ந்து வழங்குவதில் எப்போதும் கடமைப்பட்டு உள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தொடங்குவதன் மூலம் தென்சென்னையில் வாழும் மக்களுக்கு எமது சேவையை இலகுவாக தொடர முடியும்.
எங்களின் 20 ஆண்டுகளுக்கு மேலான மருத்துவ சேவையில் ஒவ்வொருவருக்கும் கனிவான கவனிப்பு, சிறந்த பாதுகாப்பு மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதில் உறுதி கொண்டுள்ளோம் என்று காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர். எஸ். மணிவண்ணன் குறிப்பிட்டார்.
மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், நவீன மருத்துவ கருவிகள் மற்றும் உயர்திறன் மிக்க சிறப்பு மருத்துவர்களுடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனை, சென்னை மாநகரில் அனைத்து தரப்பினருக்கும் முதன்மை மருத்துவமனையாக திகழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை