விருப்பாக்ஷா திரை விமர்சனம் !
ருத்ரவனம் என்றொரு கிராமம். அந்தக் கிராமத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் மரணிக்கிறார்கள். ஏன், எதனால் என்று அந்தக் கிராமத்தில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. புதிதாக அந்த ஊருக்குப் புதிதாகக் குடிவந்த வெங்கடாசலபதி ஒரு குழந்தையின் சடலத்தை வைத்து பில்லி சூனியம் செய்வது தெரியவருகிறது. ஊரிலிருக்கும் குழந்தைகள் இறப்பதற்கு இவர்தான் காரணம் என்று ஊர் மக்கள் அனைவரும் வெங்கடாசலபதியின் வீட்டிற்கும் நுழைந்து அவரையும் அவர் மனைவியையும் ஒரு மரத்தில் கட்டிவைத்து உயிரோடு எரித்துவிடுகின்றனர்.
அப்போது, உங்கள் கிராமமே சுடுகாடாக மாறப்போகிறது என்ற சாபம் விடுகிறார், அவரின் மனைவி. அவர்களின் மகனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடுகின்றனர். அந்த ஊர் தலைவர் மற்றும் ஊர் மக்கள்.
அவரது மகன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சிறுவயதில் அவர் அங்க மந்திர தந்திரம் செய்யும் காட்சிகள் மிக அற்புதமாக காட்சி அமைத்துள்ளார். ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து தப்பித்து ஓடி விடுகிறார் அவர் மந்திர தந்திரங்களை கற்றுக் கொண்டு அமானுஷ்யங்களை எப்படி செய்கிறார் என்பதை படத்தின் கதை.
தன் பூர்வீக ஊரான ருத்ரவனத்தில் நடக்கும் அமானுஷ்ய மரணங்களுக்கு எப்படி நாயகன் முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பதைத் திகிலோடு த்ரில் கலந்து சொல்லியிருக்கும் படமே இந்த 'விருப்பாக்ஷா'.
சரியாக, 12 வருடங்கள் கழித்து, ருத்ரவனத்தில் அமானுஷ்ய மரணங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில், தன் பூர்வீக ஊரான ருத்ரவனத்திற்கு வருகிறார் நாயகன் சாய் தரம் தேஜ். அந்த அமானுஷ்ய மரணங்களுக்கு எப்படி நாயகன் முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பதைத் திகிலோடு த்ரில் கலந்து சொல்லியிருக்கும் படமே இந்த `விருப்பாக்ஷா'.
விடுமுறைக்காகப் பூர்வீகத்திற்கு தன் அம்மாவுடன் வருகிறார் நாயகன். ஊர்த் தலைவரின் மகளாக நாயகி சம்யுக்தா. அவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின் அது வழக்கம்போலக் காதலாக மாறுகிறது. இதற்கிடையே ஊர்த் திருவிழாவின்போது ஒரு முதியவர் கோயிலின் கருவறையில் வந்து விழுந்து இறந்துபோகிறார். இதனால், ஊர்மக்கள் அதிர்ச்சியடைகின்றனர். ஊரில் எது நடந்தாலும் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கும் பிரகடனத்தை சாஸ்திரத்தை படித்துத்தான் தீர்வு காண்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதன்படி, எட்டு நாள்களுக்கு ஊர் மக்கள் யாரும் ஊரைவிட்டு வெளியே போகக்கூடாது, புதியவர் யாரும் உள்ளே வரக்கூடாது என முடிவெடுக்கின்றனர்.
இதை மீறினால் மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கும் என்கிறார்கள். தன் காதலனுடன் ஊரைவிட்டு ஓடிப் போக ஒரு பெண் ஊர் எல்லையைத் தாண்டுகிறார். அதனால், பல அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. நிறைய இறப்புகள் ஏற்படுகின்றன. அவையெல்லாம் எப்படி நிகழ்கின்றன, யார் அதற்குக் காரணம், நாயகனும் நாயகியும் எப்படி இந்த அமானுஷ்ய சூழலுக்குள் வருகிறார்கள், அந்தப் பெண்ணின் சாபம் என்னவானது என்பதே மீதிக்கதை.
பாடலுக்கும் ஒரு சில காட்சிகளுக்கும் மட்டும் வந்து போகாமல் சம்யுக்தாவுக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.
சம்யுக்தாவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றி படம் என்று கூறலாம். மிக அற்புதமாக நடித்துள்ளார்.
சொல்லப்போனால், இது மொத்தமாகவே அவருடைய படம்தான். தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
கார்த்திக் தண்டு எழுதிய சுவாரஸ்யமான ஹாரர் கதையை மேலும் சுவாரஸ்யமாக்கி நமக்கு த்ரில் அனுபவம் தருகிறது சுகுமாரின் திரைக்கதை வேற லெவல் என்று கூறலாம்.
அடுத்தடுத்து நிகழும் மரணங்களைக் கோத்திருக்கும் விதம் சிறப்பு! அமானுஷ்ய நிகழ்வுகளுக்குக் காரணம் யார், எப்படி அவர் அதை நிகழ்த்துகிறார் என்பதை எதிர்பாரா ட்விஸ்டுடன் நகர்த்தச் செல்கிறது திரைக்கதை.
இருளை இருளாகவே காட்டி ஒளிப்பதிவில் உண்மைத்தன்மையைக் கொடுத்திருக்கிறார் ஷாம்தத் சைனுதீன். ஹாரர் படமென்றால் எடிட்டிங்கும் பின்னணி இசையும்தான் ஹீரோ. அந்த வகையில் நவீன் நூலியின் எடிட்டிங் ஆங்காங்கே நம்மைப் பயமுறுத்துகிறது. 'காந்தாரா'வில் கலக்கிய அஜினீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை, இதில் இன்னும் திகிலூட்டியிருந்தால் மேலும் நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.
தன் காதலி அமானுஷ்ய சக்தியால் மாட்டிக்கொண்டு வேறொரு நபராக இருக்கும்போது, ஹீரோ பேசும் காதல் வசனங்கள் அற்புதமாக உள்ளது.
அமானுஷ்யத்தால் மாட்டிக்கொள்ளும் நாயகி, ஹீரோவுக்கு உதவி செய்யும் அகோரா, `அகோரி சிவனடியார்கள். இது போன்ற காட்சிகள் மிக அற்புதமாக காட்சி அமைத்துள்ளனர்.
விருப்பாக்ஷா' இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகப்பெரிய விருந்து என்று கூறலாம். பேய் படம் ஹாரர் படம் என்றால் சிறிய குழந்தைகளுக்கு மிகவும் இஷ்டம் சமீப காலமாக இது போன்ற படங்கள் தரமான படங்கள் வரவில்லை இப்படம் குழந்தைகளுக்கு மிகப் பெரிய விருந்து.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்க்கக் கூடிய திரைப்படம் .
Rating : 4 / 5
கருத்துகள் இல்லை