சற்று முன்



தென் இந்தியாவின் சிறந்த கன்டென்ட் படைப்பாளர்களுக்கான தேடல் மோஜ்-இன் #MrandMsSouth போட்டியுடன் துவங்குகிறது !


தென் இந்தியாவின் சிறந்த கன்டென்ட் படைப்பாளர்களுக்கான தேடல் மோஜ்-இன் #MrandMsSouth போட்டியுடன் துவங்குகிறது !

ஆண்களும், பெண்களும் தங்களது படைப்பாற்றலை நிரூபிக்க நேரடியாக மோதும் இறுதிச்சுற்றுடன் நிறைவடையவுள்ள இந்த தென் இந்தியாவின் கன்டென்ட் படைப்பாளர் யுத்தத்தை காணத் தயாராகுங்கள்!

ஏப்ரல் 24 அன்று துவங்கவுள்ள இந்த கடினமான போட்டியின் முதல் மூன்று சுற்றுகளை மோஜ்-இல் நேரலையில் காணுங்கள்; யார் யார் மிஸ்டர் சவுத் மற்றும் மிஸ் சவுத் பட்டங்களை வெல்லப்போகிறார்கள் என்பதையும் பாருங்கள்

சென்னை: ஆந்திராவின் நாட்டு கோடி புலுசுவை விட தமிழ்நாட்டின் சிக்கன் செட்டிநாடு தான் மிகவும் சுவையானது என்பதை நிரூபிக்கும் திறன் உங்களிடம் உள்ளதா? உங்களுக்கு பிடித்தமான வசனங்களை சிறப்பாக பேசி உங்கள் திறமையை வெளிப்படுத்தி டோலிவுட் vs கோலிவுட் இறுதிச்சுற்றில் மோத நீங்கள் தயாரா? உங்கள் அபிமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வெல்ல உங்களால் ஆதரவைத் திரட்ட முடியுமா? ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெறவுள்ள தென் இந்தியாவின் மாபெரும் மோஜ் யுத்தத்திற்கு தயாராகுங்கள். 

இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான மோஜ் வழங்குகிறது – மிஸ்டர் அண்ட் மிஸ் சவுத் போட்டி! ஒரு வாரம் நிகழவுள்ள இந்த போட்டிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசக்கூடிய சிறந்த ஆண் மற்றும் பெண் கன்டென்ட் படைப்பாளர்கள்  (கிரியேட்டர்கள்) பங்கேற்கவுள்ளனர். இந்த திறமைமிக்க போட்டியாளர்கள் தொடர் போட்டிகளில் பங்கேற்று, ரூ 10,000/- மதிப்பிலான அட்டகாசமான பரிசுகளை வெல்ல மோதுவார்கள். இந்த போட்டியானது சவால் நிறைந்த மூன்று சுற்றுகளை உள்ளடக்கியதாக இருக்கும்; இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மிஸ்டர் மற்றும் மிஸ் சவுத் என்கிற பட்டம் அளிக்கப்படும். ஆனால் ஆச்சரியங்கள் இத்துடன் முடியவில்லை – போட்டிகளைக் காணும் நேயர்களும் கூட இதில் பங்கேற்கலாம்! பரிசுகளை அளிப்பவர்கள் (கிஃப்ட்டர்ஸ்) மற்றும் படைப்பாளர்கள் (கிரியேட்டர்ஸ்) ஆகியோர் கூட, மோஜ் லைவ் ஸ்ட்ரீமிங் அம்சத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களை விர்ச்சுவல் கிஃப்ட் அளிப்பது மூலம் ஊக்குவித்து ரூ.10,000/- மதிப்பிலான பரிசுகளை வெல்லலாம். 

மோஜ் லைவ்வில் நடைபெறும் பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடவர் மகளிர் இடையேயான இந்த போட்டியே, தென் இந்தியாவை மையமாகக் கொண்ட படைப்பாளர்களுக்காக மோஜ் நடத்தும் முதல் போட்டியாகும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு நேரலையில் செல்ல வேண்டும், மற்றும் இந்த போட்டி குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். அசாதாரன திறமைகளை கண்டு மகிழவும், அவர்களது உற்சாகத்தில் பங்கேற்கவும் தயாராக இருங்கள்!

மிஸ்டர் அண்ட் மிஸ் சவுத் போட்டியின் முதல் சுற்றான #BattleItOut, ஏப்ரல் 24-25 தேதிகளில் நடைபெறும். திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் மொழி என பல்வேறு தீம்களில் படைப்பாளர்கள் மோதுவார்கள், நேயர்கள் விர்ச்சுவல் பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். அதிகப்படியான ஆதரவைப் (cheers) பெற்ற முதல் 500 படைப்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். இரண்டாவது சுற்றான #MoreBattleMoreCheers-இல், படைப்பாளர்கள் முதல் 100 இடங்களை பிடிப்பதற்காக ஏதாவது ஒரு தீம் அடிப்படையில் குறைந்தபட்சம் நான்கு கிரியேட்டர் போட்டிகளில் (battle) ஈடுபட்டு, அவர்களது ரசிகர்களிடமிருந்து அதிகபட்ச ஆதரவை (cheers) ஈட்டும் நோக்கில் போட்டியிடுவார்கள். மூன்றாவது மற்றும் இறுதிச்சுற்றான #TheUltimateBattle-க்கு முன்னேறும் போட்டியாளர்கள் குறைந்தபட்சம் எட்டு கிரியேட்டர் போட்டிகளில் (battle) ஈடுபட வேண்டும். அதிகபட்ச ஆதரவினைப் (cheers) பெறும் ஆண் மற்றும் பெண் படைப்பாளர்களுக்கு  முறையே மிஸ்டர் சவுத் மற்றும் மிஸ் சவுத் என்கிற பட்டம் அளிக்கப்பட்டு, ரூ.10,000/- மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். கூடுதலாக மற்ற முன்னணி படைப்பாளர்கள் மற்றும் பரிசு கிஃப்ட்டர்ஸ்களுக்கும் ரூ. 10,000/- மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

திறமைகள் கொட்டிக் கிடக்கும் தென் இந்தியாவில், கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் டிஜிட்டல் சூப்பர் ஸ்டார்கள் பிராந்திய எல்லைகளைக் கடந்து தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து வருகின்றனர். அவர்களது திறமைகளை மேலும் பலருக்கும் தெரிய செய்வதற்கும், ஈடுபாட்டை அதிகரிக்கவும் மோஜ் லைவ் ஒரு பிரபல தளமாக விளங்குவதோடு, நிகழ்-நேரத்தில் ஃபன் விர்ச்சுவல் கிஃப்டிங் மூலம் பணம் ஈட்டவும் வழிவகுக்கிறது. இதற்கு முந்தைய மோஜ் போட்டிகளில் வென்ற தென்னிந்திய வெற்றியாளர்கள் - மிகப்பெரிய பிராண்டுகளுடன் தொழில்முறை ஒப்பந்தங்களின் மூலமும், பல்வேறு டிஜிட்டல் வழிகளிலும் பிரபலாமாகும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை