சற்று முன்



பிரசாந்த் கருத்தரிப்பு மற்றும் பெண்கள் மையம் !


பிரசாந்த் கருத்தரிப்பு மற்றும் பெண்கள் மையம்

சென்னையில் சிறப்பாக இயங்கி வரும் பிரசாந்த் மருத்துவமனை குழுமம் தங்களது நான்காவது குழந்தையின்மை மற்றும் பெண்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையத்தை தாம்பரத்தில் தொடங்கி உள்ளது.

சிறப்புமிக்க இந்த மருத்துவமனையை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர். ராஜா அவர்கள்  பங்கேற்று துவக்கி வைத்தார். திறப்பு விழா சலுகையாக ஏப்ரல் 30ம் தேதி வரை கருத்தரித்தல் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு  இலவச ஆலோசனை மற்றும் குறைந்த கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை | ஏப்ரல் 9, 2023 :சென்னையின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமம் , தாம்பரம் சேலையூரில் தன்னுடைய நான்காவது குழந்தை கருத்தரித்தல் மற்றும் பெண்கள் மையத்தை துவங்கியுள்ளது.  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் இந்த புதிய மையத்தை திறந்து வைத்தார். இங்கு பெண்களுக்கான கருத்தரித்தல் தொடர்பான முழுமையான சிகிச்சைகள், நோய் அறிதலுடன் தொடர்புடைய பரிசோதனைகள், கருவுறுதலுக்கான  ஆலோசனைகள் போன்ற அனைத்தும் அனுபவமிக்க கருவுறுதல் சிகிச்சை நிபுணர்களுடன் சிறந்த முறையில்  சிகிச்சை அளிக்கப்படும். 

திறப்பு விழாவை முன்னிட்டு கருவுறுதலை எதிர்நோக்கும் தம்பதியருக்கு  ஏப்ரல் 30ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரையும், மாலை 5மணி முதல் 8 மணி வரையும் இலவச ஆலோசனை கிடைக்கும்.  மேலும் கட்டண சலுகைகளாக  இலவசமாக கருத்தரித்தல் நிபுணர்களின்  ஆலோசனைகள், 10,000 மதிப்புள்ள சோதனைகள் மற்றும் வெறும் 80,000 கட்டணத்தில் IVF /ICSI சிகிச்சை மற்றும் IUI 4,000 கட்டணத்தில் சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். எங்கள் கருத்தரித்தல் மையம் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ராஜாகீழ்பாக்கம் பகுதியில் உள்ளது. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் 74 18 08 77 78/ 73 58 22 23 25 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை