ருத்ரன் திரை விமர்சனம் !
ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் ருத்ரன். இந்த படத்தை 5 ஸ்டார் தயாரிப்பாளர் கதிரேசன் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ருத்ரன் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் நாசர்- பூர்ணிமா ஆகியோரின் மகன் தான் ராகவா லாரன்ஸ். இவர் வேலை தேடி அலைகிறார். அப்போதுதான் பிரியா பவானி சங்கர் மீது காதல் ஏற்படுகிறது. நாசரின் நண்பர்கள் கடனை வாங்கி பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார்கள். இதனால் நாசர் மனம் உடைந்து இறந்து விடுகிறார். இதற்கிடையில் லாரன்ஸ்- பிரியா பவானி சங்கர் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு வாங்கிய கடனை அடைப்பதற்காக ராகவா லாரன்ஸ் அமெரிக்கா செய்கிறார்.
லாரன்ஸ் இருக்கு நண்பனாக காலி வெங்கட் நடித்துள்ளார் காளி வெங்கட்டின் நடிப்பு பிரமாதம் அவரது கதாபாத்திரம் இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.
சில ஆண்டுகளிலேயே மகளுடன் பிரியாவும் அங்கு செல்கிறார். வெளிநாட்டிலிருந்து தனியாக சென்னை திரும்பும் பிரியா காணாமல் போய்விடுகிறார். அதனை எடுத்து தன்னுடைய அம்மா பூர்ணிமாவின் இறப்பிற்கு லாரன்ஸ் ஊருக்கு வருகிறார். அப்போது பிரியா காணாமல் போன விஷயம் லாரன்சுக்கு தெரிகிறது. இதற்கு பின்பு சரத்குமார் இருப்பது தெரிய வருகிறது. துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் டானாக சரத்குமார் இருக்கிறார்.
மேலும், சரத்குமார் தம்பிகளை ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து கொலை செய்கிறார். இதற்கு சரத்குமார் பழிவாங்குகிறார். இறுதியில் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? பிரியா பவானி சங்கர் கிடைத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. காஞ்சனா 3 படத்திற்கு பின் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் படம் வெளியாகிறது. மிகச் சிறப்பாக லாரன்ஸ் நடித்திருக்கிறார். அதேபோல் நடனத்தில் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அதை மீண்டும் அவர் இந்த படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.
இயல்பாகவே லாரன்ஸ் உடைய காமெடி எல்லாம் பயங்கரமாக இருக்கும். இந்த படத்தில் அவருடைய காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என எல்லாமே பட்டையை கிளப்பி இருக்கிறது. கதாநாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்கிறார். அவருடைய கதாபாத்திரம் நன்றாக உள்ளது பிரியா பவானி சங்கரின் காதல் காட்சிகள் பிரமாதம்..
இரண்டாம் கதை நகர்வதற்கு இவருடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது. டானாக வரும் சரத்குமார் முதல் காட்சியில் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் பெடல் எடுத்து இருக்கிறார்.
கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. புது கதைகளம், ஆக்சன், காதல், காமெடி என அனைத்தையும் கொடுக்க இயக்குனர் கதிரேசன் முயற்சித்து இருக்கிறார். ஆனால், காட்சிகள் எல்லாம் பெரிதாக யூகிக்க கூடிய அளவில் இல்லை. சாதாரணமாகவே இருக்கிறது. இன்னும் கதையில் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கொடூர வில்லனாக சரத்குமாரை காண்பித்திருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் அவருடைய கொடூர வில்லத்தனத்தை குறைத்து இருந்திருக்கலாம். ஒளிப்பதிவும், பின்னனி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான பழிவாங்கும் கதை தான். ஆனால், சுவாரசியமாக இருக்கிறது படம். மேலும், தாய் தந்தையை தனியாக விட்டு விடாதீர்கள் என்ற கருத்து இன்றைய காலத்து கட்டத்திற்கு சொல்லும் வகையில் இருக்கிறது.
பெற்றோர்களை விட்டு பிள்ளைகள் பிரிந்து இருந்தால் என்ன நடக்கும் என்பதே இப்படம் ஒரு உதாரணம்.
ஆக்ஷன் தவிர அனைத்தும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருபவர்களுக்கு இந்த படம் நன்றாக இருக்கும்.முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இரண்டாம் பதிவு விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ் படங்கள் என்றாலே அன்பு பாசம் சென்டிமென்ட் பஞ்சமே இல்லை.
கிளைமாக்ஸ்சில் வரும் பாடல் ருத்ரதாண்டவம் ஆடும் பாடல் திரையரங்குகளை அதிர விடுகிறது.
ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.
ருத்ரன் ருத்ரம் தாண்டவம் ஆடுகிறான்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை