போலா திரை விமர்சனம் !
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் போலா இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார்.
அஜய்தேவ்கன் நடிப்பு மற்றும் இயக்கத்தில், மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் நரேனின் கதாபாத்திரம் பெண் கதாபாத்திரமாக மாற்றப்பட்டு அதில் தபு நடித்துள்ளார். நடிகை அமலா பால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி பஸ்ரூர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் வெற்றி பெற்ற
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் படம் தான் போலா.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். போலா படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான போதே கைதி படத்துடன் கம்பேர் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் படம் எப்படி இருக்கு? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படம் எப்படி இருக்கு பார்க்கலாம் வாங்க
சிங்கம், த்ரிஷ்யம் என தென்னிந்திய படங்களை இந்தியில் ரீமேக் செய்து ஆக்ஷனில் அதிரடி காட்டி வரும் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடித்துள்ள படம் தான் போலா. கைதி படத்தை விட பல மடங்கு சிஜி வொர்க்குகளை ஆக்ஷன் காட்சிகளுக்கு போட்டு 3டியிலேயே படத்தை வெளியிட்டு தெறிக்கவிட்டு இருக்கிறார்.
சி ஜி ஒர்க்குகள் அனைத்தும் பிரமாதமாக செய்யப்பட்டுள்ளது இப்படத்தில்.
அஜய் தேவ்கானுக்கு ஆரம்பம் முதல் பட்டையை கிளப்பியுள்ளார் அவர் தந்தூரி சிக்கன் சாப்பிடும் காட்சி வேற லெவல் என்று கூறலாம். படம் முழுக்க மிரட்டலாக அசத்தியுள்ளார். அவரது நடிப்பு நமக்குத் தெரியும் ஆனாலும் இப்படத்திலும் மிகப்பெரிய சண்டைக் காட்சிகள் ஸ்டண்ட் அனைத்தும் நன்றாக பண்ணி உள்ளார்.
அஜய் தேவ்கான் தனது மகளைப் பார்க்கும் காட்சி நம் மனதை தொட்டுகின்றன. தந்தைக்கும் மகளுக்கும் பாசம் போராட்டம் காட்சிகள் அனைத்தும் பிரமாதம் நன்றாக நடித்துள்ளார்.
தபு நடிப்பு பிரமாதம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் மிக அற்புதமாக கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளார். சமீப காலமாகவே தபு கதாபாத்திரம் நன்றாக தேர்வு செய்து நடித்துள்ளார்.
இந்த படத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக அபிஷேக் பச்சன் நடித்துள்ளார் ஒரு வேளை கடைசியா அந்த வில்லன் கதாபாத்திரம் தான் அபிஷேக் பச்சனா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். செம மசாலா எண்டர்டெயினர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாலிவுட் படங்களில் இது போன்ற வித்தியாசமான படங்கள் இதுவரை யாரும் பண்ணவில்லை.
மிகத் துணிச்சலுடன் அஜய் தேவ்கான் இப்படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார் நடித்துள்ளார்.
அஜய் தேவ்கானுக்கு இது மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக்கூடிய படம். போலா வந்தான் வென்றான்.
Rating : 4 / 5
கருத்துகள் இல்லை