சற்று முன்



தசரா திரை விமர்சனம் !



இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த “தசரா”  படத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாண் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம்  திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கு பார்க்கலாம் வாங்க.

தரணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நானி மற்றும் சூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் தேக்ஷித் ஷெட்டி என இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள். ஆனால் இருவரும் அந்த கிராமத்தில் இருக்கும் வெண்ணிலாவை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார்கள். வெண்ணெலாவின் மீது சூரிக்கு இருக்கும் காதலை அறிந்த தரணி தன்னுடைய காதலை தியாகம் செய்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உதவுகிறார்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறார்களா? சிவண்ணா ராஜண்ணா என்ற கதாபாத்திரத்தில் வரும் கிராமத்து அரசியல் வாதிகளினால் எப்படி தரணி மற்றும் சூரி யின் வாழ்க்கை எப்படி மாற்றுகிறது என்பதுதான் மீதி கதை. 

சிவண்ணா ராஜ்ண்ணா இந்த ரெண்டு கதாபாத்திரம் அற்புதமாக நடித்துள்ளனர். சமுத்திரக்கனி மற்றும் சாய் இருவரும் பிரமாதமாக தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை முழுமையாகவே வாழ்ந்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் வெளியான போது இப்படம் “புஷ்பா” படத்தை போல இருக்கிறது என பல கூறிவந்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் புஷ்பா படத்தை இந்த படம் தூக்கி சாப்பிட்டுவிடும் என கூறும் அளவிற்கு “தசரா” படமானது உருவாக்கி உள்ளது பாராட்டி வருகின்றனர்.

 அதிலும் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் நடிப்பு மிகவும் பிரமாதம். நாம் கீர்த்தி சுரேஷ் இதுவரை காணாத கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

இயக்குனர் புதுமுகமாக இருந்தாலும் அவரின் இயக்கம் பாராட்டுகளை பெறுகிறது. ஆனால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்ற முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதியில் சில இடங்களில் கதை மெதுவாக் சென்றாலும் கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்துள்ளது. கண்டிப்பாக நானி அவர்களின் கிளைமாக்ஸ் கட்சியில் வரும் நடிப்பிற்கு தேசிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும். அதே போல பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் கதைக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார். 

படத்தில் நடித்த அனைவரும் தங்களுடைய 100சதவிகித நடிப்பை கொடுத்திருக்கின்றனர் அற்புதமாக நடித்துள்ளனர்.

பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் பட்டைய கிளப்பியுள்ளார் என்று கூறலாம்.

ஒளிப்பதிவு மிகவும் பிரமாதம் அற்புதமாக பண்ணி உள்ளார்.

 மொத்தத்தில் நேச்சுரல் ஸ்டார்  நானி க்கு மிகப்பெரிய  படமாக இந்த “தசரா”  அமைந்துள்ளது.  நாம் நாணியை புதிய தோற்றத்தில் பார்த்துள்ளோம் இப்படத்தில்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.  தசரா வந்தான் வென்றான்

Rating: 3.5 / 5 


கருத்துகள் இல்லை