சற்று முன்



தெய்வமச்சான் திரைவிமர்சனம் !



புதுமுக இயக்குனர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தெய்வமச்சான் 

இந்த படத்தில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இறப்பவர்கள் குறித்து முன்கூட்டியே ஹீரோ கனவில் வரும் புது வித்தியாசமான கதைக்களம். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் விமலின் தெய்வ மச்சான் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ஹீரோவிற்கு முன்கூட்டியே யார் இறக்கப் போகிறார்கள் என்பது தெரிகிறது. இதனால் அவர் கவலையில் இருக்கிறார்கள். அதோடு தனது தங்கையான குங்குமதேனை எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அண்ணன் கார்த்தி போராடுகிறார். இவரது கனவில் வரும் சாட்டைக்காரன் மூலம் யார் இறக்கப் போகிறார்கள்? என்பது முன்கூட்டியே தெரிகிறது. அதன்படி ஒவ்வொருத்தரும் இறக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் தன்னுடைய தங்கைக்கு நல்ல வரன் அமைந்த உடன் அண்ணன் கார்த்தி திருமணம் செய்து வைக்கிறார். அப்போது திருமணத்திற்கு முந்தைய நாள் கார்த்தியின் கனவில் உன் தங்கச்சி புருஷன் கல்யாணம் ஆகி இரண்டு நாளைக்குள் இறந்து விடுவான் என்று கனவு வருகிறது. இதை கேட்டு ஹீரோ அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இதனை அடுத்து தன்னுடைய தங்கை கணவரை விமல் காப்பாற்றுவாரா? இதனால் என்ன விபரீதம் நடக்கப்போகிறது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் அண்ணன் கார்த்தி கதாபாத்திரத்தில் விமல் நடித்திருக்கிறார். வழக்கம்போல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து குங்குமத்தேன் என்ற கதாபாத்தில் அனிதா சம்பத் நடித்திருக்கிறார். இவரும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க கிராமத்து பாணியில் சென்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே வரும் காமெடிகளும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

அனிதா சம்பத்தின் நடிப்பு அற்புதம் பாண்டியராஜன் மிக அற்புதமாக நடித்துள்ளார் பாலசரவணன் நன்றாக காமெடி கவுண்டர் கொடுத்துள்ளார் இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

காமெடிகள் ஓர்கவுட் நன்றாக அமைந்துள்ளது. ஆனால், பல இடங்களில் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. ஹீரோவிற்கு வரும் கனவை கொஞ்சம் திகில் பாணியில் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். ஆனால், அதை கொஞ்சம் நீளமாக அழகாக காண்பித்திருக்கலாம்

இயக்குனர் கதைகளத்தில் 

மிக நன்றாக சுவாசித்துடன் திரைக்கதையை கொண்டு சென்றுள்ளார். நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். 

ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

தெய்வ மச்சான் மச்சான்களுக்கு சுவாரஸ்யமான படம்.

Rating: 3 / 5 



கருத்துகள் இல்லை