சற்று முன்



பத்து தல திரை விமர்சனம் !


பத்து தல சிம்பு நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் .

இந்த படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.  படம் எப்படி இருக்கு பார்க்கலாம் வாங்க.

படத்தில் சிம்பு அவர்கள் ஏஜிஆர் என்ற டான் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மணல் மாஃபியாவை மையமாக வைத்து இந்த படம் கதை நகர்கிறது. தமிழ்நாட்டினுடைய முதல்வர் படம் பிரபுதாப். இவருக்கும் அவருடைய அண்ணன் கௌதம் மேனனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் சந்தோஷ் கடத்தப்படுகிறார். பின் முதல்வர் காணாமல் போய்விடுகிறார் என்ற செய்தி வெளியானவுடன் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்படுகிறது.

இதனால் தற்காலிக முதல்வராக ஏ ஜி ஆரின் விசுவாசி கிருஷ்ணா பொறுப்பேற்கிறார். ஏ ஜி ஆர் சிம்பு மணல் கடத்தலில் ஜாம்பவானாக திகழ்கிறார். பின் முதல்வர் கடத்தலில் ஏ ஜி ஆர் சிம்புவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால் கௌதமுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் போலீஸ் அதிகாரியான கௌதம் கார்த்திக் சிம்புவை கைது செய்ய பல சம்பவங்களை செய்து ஏஜிஆரின் ஆட்களில் ஒருவராக மாறுகிறார்.

இறுதியில் முதல்வர் என்ன ஆனார்? கௌதம் கார்த்திக் நிலைமை என்ன? சிம்பு உடைய திட்டம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் மணல் மாஃபியா ஜாம்பவானாக ஏஜிஆர் கதாபாத்திரத்தில் சிம்பு மிரட்டி இருக்கிறார். சிம்புவினுடைய நடிப்பு தூள் கிளப்பு இருக்கிறது. படத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மத்தியில் கிளாப்சை ஏற்படுத்தி இருக்கிறது. வில்லனாக கௌதம் மேனன் மிரட்டி இருக்கிறார். 

கௌதம் மேனனும் சிம்புவும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் ரசிகர்களிடையே மிக எதிர்பார்ப்பையும் கைத்தட்டல்களையும் கொடுத்துள்ளது.

இவரை அடுத்து பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் கௌதம் கார்த்திக் காதல் காட்சிகள் நன்றாக உள்ளது அவருடைய கெமிஸ்ட்ரி இப்படத்தில் தூள் என்று கூறலாம்.


இவர்களைத் தொடர்ந்து கௌதம் கார்த்தியும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். அதிகாரப் கதாபாத்திரத்தில் அதிகார மையத்தின் ஆளுமையையும் மையமாக வைத்து இந்த கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு தேர்வு செய்த கதாபாத்திரங்களும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. அதேபோல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் செய்திருக்கிறது.

ஆனால், படத்தில் சிம்புவை இடைவெளிக்கு பிறகு அறிமுகப்படுத்தி இருப்பதால் குறையாகவே இருக்கிறது. 

 இப்படத்தில் குறை என்று ஒன்றுதான் இருக்கிறது சிம்புவை முதல் பாதியில் முழுமையாக நம்மால் பார்க்க முடியவில்லை அது ஒன்றுதான் குறை.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சிம்புவின் கதாபாத்திரம் காண்பிக்கப்பட்டிருந்தால் வேற லெவலில் இருந்து இருக்கும். காண்பிக்கப்பட்டிருந்தால் படத்தில் பல இடத்தில் இயக்குனர் காண்பித்திருக்கும் ட்விஸ்ட் வேற லெவல். இரண்டாம் பாதியில் வரும்ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் பிரமாதம். முதல் பாதி மிக வேகமாக சென்று இருக்கிறது.

சிம்புவின் நடிப்பு வேற லெவல். சிம்புவின் தங்கை சென்டிமென்ட் காட்சிகள் நம் மனதை தொடுகிறது. மிக அற்புதமாக அண்ணன் தங்கை பாசத்தை உணரும் படமாகவும் அமைந்துள்ளது.

இதுவரை நாம் காணாத சிம்புவை இப்படத்தில் படத்தில்  கண்டுள்ளோம்‌ இது போன்ற கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து சிம்பு நடித்தால் ரசிகர்களுக்கு என்றும் விருந்துதான்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவு படத்திற்கு  பக்க பலமாக அமைந்துள்ளது. கதைக்களம் அருமை மிக நன்றாக அமைத்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சி ஸ்டண்ட் காட்சிகள் வேற லெவல் என்று கூறலாம். இரண்டாம் பாதி அமர்க்களம் என்று கூறலாம். 

ஆக மொத்தத்தில் பத்து தல குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

பத்து தல கெத்து தல. சிம்பு ராக்கிங்

Rating : 4 / 5 



கருத்துகள் இல்லை