சென்னையில் உள்ள வசதி குறைந்த சிறுமிகளுக்கு 100 மிதி வண்டிகள் மற்றும் பள்ளி பொருட்கள் தொகுப்பை RBL வங்கி வழங்குகிறது !
சென்னையில் உள்ள வசதி குறைந்த சிறுமிகளுக்கு 100 மிதி வண்டிகள் மற்றும் பள்ளி பொருட்கள் தொகுப்பை RBL வங்கி வழங்குகிறது !
பெண்களின் அதிகாரம் நோக்கிய ஒரு முன்முயற்சியில், RBL வங்கி அதன் CSR முன்முயற்சியான UMEED 1000 இன் கீழ் பெண் குழந்தை கல்விக்கான ஆதாரத்தை ஆதரிக்கிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 1,000க்கும் மேற்பட்ட மிதி வண்டிகள் மற்றும் பள்ளிபொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சென்னை, ஏப்ரல் 11, 2023: பெண்கள் அதிகாரத்தை ஆதரிக்க, RBL வங்கி, அதன் CSR முன்முயற்சியான UMEED 1000 திட்டத்தின் இன் கீழ், சென்னையில் உள்ள வசதி குறைந்த சிறுமிகளுக்கு 100 மிதிவண்டிகளை வழங்கியுள்ளது. வடக்கு மண்டலம் டிஐஜி / காவல்துறை இணை ஆணையர், திருமதி ஆர் வி ரம்யா பாரதி, ஐபிஎஸ், திருமதி வி சாந்தி, கல்வி அதிகாரி, சென்னை மாநகராட்சி உதவிக் கல்வி அலுவலர் திருமதி நாகலட்சுமி, தலைமை ஆசிரியை திருமதி. செல்வகுமாரி எஸ், மற்றும் RBL வங்கியின் மூத்த பிரதிநிதிகள் ஆகியோரது முன்னிலையில் இந்த வங்கி, நன்கொடையளிக்கும் நிகழ்வை நடத்தியது. சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆடிட்டோரியத்தில் இந்த மிதிவண்டிகளை பெறுவதற்கு சிறுமியர் திரண்டபோது, அவர்கள் மிகவும் உற்சாகம் காட்டினார்கள். கல்வித் துறை, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் ஆதரவுடன், வங்கியால் பயனாளிகள் நேரடியாக அடையாளம் காணப்பட்டனர்.
குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தூரமாக இருக்கிறது. இந்த முயற்சியானது, கல்விக்கான அணுகலை அதிகரிக்க மிகவும் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கும். இந்த மிதிவண்டிகள், பள்ளிக்குச் செல்வதை, ஆற்றல் திறன் கொண்டதாக மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் வகையில், பெண் குழந்தைகளுக்கு உதவும். சென்னை, ஹைதராபாத், ராய்ப்பூர், சிலிகுரி, கோலாப்பூர், குவஹாத்தி, கொல்கத்தா மற்றும் கோவா உட்பட இந்தியா முழுவதும் 1000க்கும் மேற்பட்ட மிதிவண்டிகள் மற்றும் பள்ளிப் பொருட்களின் தொகுப்பை இந்த வங்கி வழங்குகின்றது.
RBL வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான R சுப்பிரமணியகுமார், இந்த முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்தபோது, “‘சமூகமே உத்வேகமாக’ என்ற எங்களின் நோக்கத்திற்கு உண்மையாக, எங்களின் தனித்துவமான CSR நீட்டிப்பு திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். உலகெங்கிலும் உள்ள பெண்குழந்தைகளுக்கு கல்வியானது பிரகாசமான எதிர்காலத்தை காண்பதற்கு முக்கியமானதாக இருக்கிறது. கல்விக்கான அணுகலை எளிதாக்குவதன் மூலம், இளம் சிறுமிகள், தங்கள் கனவுகளை அடைவதைத் தடுக்கும் தடைகளை நாம் உடைக்க முடியும்."என்று கூறினார்.
கருத்துகள் இல்லை