சற்று முன்



JOHN WICK 4 திரை விமர்சனம் !

 


ஹாலிவுட் திரையில் வெளியாகும் சில படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அயன் மேன், பேட்மேன், ஜோக்கர், அவெஞ்சர்ஸ் போன்ற படங்கள் பேட்மேன், உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் எந்த பவரும் இல்லாத சூப்பர் ஹீரோவாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஜான் விக். இந்த ஜான்விக் படத்தின் நான்காவது பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ஜான் விக்கை கடந்த பாகத்தில் 8 பேர் சேர்ந்த குழு தேடுவது போல காண்பித்திருந்தார்கள். பின் வின்சடன் அவரை சுடுகிறார். இதனால் ஜான் விக் அவரை பில்டிங்கில் இருந்து கீழே விழுகிறார். ஆனால், ஜான்விக் 100 மாடியில் இருந்து கீழே விழுந்தாலும் எழுந்து விடுவார். அப்படியே அவர் தன்னுடைய அடுத்த வேட்டைக்கு செல்கிறார். இன்னொரு பக்கம் ஜான் விக்கை எங்கிருந்தாலும் கொல்ல வேண்டும் என்றும் அவருக்கு உதபவர்களையும் கொல்ல வேண்டும் என்று டேபிள் முடிவு செய்கிறது.

இவற்றையெல்லாம் ஜான் எப்படி முறியடித்தார்? ஜான்விக்கின் வேட்டை வெற்றி அடைந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஜான்விக் கதாபாத்திரத்தில் கெய்னு ரிவஸ் நடித்திருக்கிறார். எப்போது கதாபாத்திரத்தில் இந்த பாகத்திலும் கெய்னு ரிவஸ் மிரட்டி இருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல். ஒரு மணி நேரம் காண்பிக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் அதிர வைத்திருக்கிறது.

ஸ்டண்ட், துப்பாக்கி, கத்தி என ஆக்சன் ரசிகர்களுக்கு ஏற்றவாறு விருந்து வைத்திருக்கிறார் இயக்குனர். மேலும், படத்தில் ஜான்விக்கை தாண்டி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது கெயின் தான். கண் அதிகம் ஒரு கூலிப்படையாக ஜான் விக்கை அவர் கொல்ல பார்க்கிறார். ஜான்விக்கே தப்பித்து ஓடக்கூடிய அளவிற்கு மிரள வைத்திருக்கிறார் கெயின். கெயினுடைய சண்டைக் காட்சிகள் எல்லாம் அசர வைத்திருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே ஸ்டண்ட் காட்சிகள் தான். ஸ்டண்ட் மாஸ்டர் வேற லெவல் என்று கூறலாம்.

ஒளிப்பதிவும் அற்புதம் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. ஏதோ ஒரு சண்டைக் காட்சி போல் இல்லாமல் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவலில் மிரள வைத்திருக்கிறார் காட்சி ஜான் மற்றும் கெயின் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு அதிக ஸ்கோரை கொடுத்திருக்கிறது. அதேபோல் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் உறைய வைத்திருக்கிறது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக ஜான்விக் 4 அமைந்திருக்கிறது.

ஜான்விக், கெயின் உடைய நடிப்பு சூப்பர் மிக அற்புதமாக நடித்துள்ளார் சண்டை காட்சிகள் பிரமாதம்  படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சி சூப்பர் திரைக்கதையை இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு  சண்டைக் காட்சிகள் அற்புதம் ஆக்சன் இயக்குனர் தூள் கிளப்புகிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களில் சமீப நாட்களில் வந்த திரைப்படங்களில் இந்த படம் மிக அற்புதமான படம்.

அனைவரும் பார்க்கக்கூடிய தரமான படம்.

Rating : 4 / 5 


கருத்துகள் இல்லை