வடபழனியின், விஜயா மெடிக்கல் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் AI- அடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது !
சென்னை, 28, மார்ச் 2023: இந்தியாவின் முதல் Al-அடிப்படையிலான தொடர்பு இல்லாத தொலை நோயாளி கண்காணிப்பு (RPM) & முன் எச்சரிக்கை அமைப்பு (EWS) ஆன Dozee, சென்னையிலுள்ள விஜயா மருத்துவமனையால், தொடர்ச்சியான நோயாளி கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புடன் மருத்துவ விளைவுகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டது. தொலைவிலுள்ள நோயாளிகளைக் கண்காணிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களை அனுமதிப்பதன் மூலம், Dozee இன் தீர்வு, மருத்துவமனையில் நோயாளிகளின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் மேம்படுத்தும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தீர்வுகளைக் கொண்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய மையங்களில் ஒன்றான விஜயா மருத்துவமனை ஆனது, நாட்டின் தற்போதைய சுகாதார சூழலை மாற்றுகிற டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளது.
நோயாளிகளின் தூக்க முறைகளைக் கண்காணிக்கும் அதே வேளையில் சுவாச விகிதம், இதயத் துடிப்பு, SPO2 அளவுகள், இரத்த அழுத்தம் மற்றும் வெப்பநிலை போன்ற அவர்களின் முக்கிய அளவுருக்களை தொலைவிலிருந்து கண்காணிக்க Dozee, சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவுகிறது. நோயாளியின் நிலை மோசமாகத் தொடங்கினால், அதன் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பானது, உடனடி நடவடிக்கைகளை செயல்படுத்த, உடனடியாக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை எச்சரிக்கும், இது நோயாளியின் உயிர் நிலைகளை கைமுறையாகப் பரிசோதிப்பதற்காக செவிலியர்கள் செலவிடும் தினசரி நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது மற்றும் மாறாக, மேலும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் பராமரிப்புக்காக, செவிலியர்களுக்கு கூடுதல் நேரத்தை வழங்குகிறது.
தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புக்கு, Al ஆல் இயக்கப்படும் பாலிஸ்டோ கார்டியோகிராஃபியை (BCG), டோசி பயன்படுத்துகிறது. Dozee இன் தொழில்நுட்பம் காப்புரிமை பெற்றது மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, மேலும் இது 98.4% துல்லியமானது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான உயிர்நிலை கண்காணிப்பு, நோயாளியின் பாதுகாப்பு, மருத்துவ விளைவுகள் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை கணிசமாக விளைவிக்கிறது. ஒவ்வொரு ~ 100 Dozee இணைக்கப்பட்ட படுக்கைகளுக்கும், அது ~144 உயிர்களை காப்பாற்றும் மற்றும் செவிலியர்களால் உயிர்நிலைக்காக எடுக்கும் நேரத்தின் ~80% நேரத்தையும் சேமிக்கும் மேலும் ICU சராசரி தங்கும் காலத்தை (ALOS) ~1.3 நாட்கள் குறைக்கும் என்று சுயாதீன ஆலோசனை நிறுவனமான சத்வா மூலம் செய்யப்பட ஆய்வு காண்பிக்கிறது.
Dozee -இன் இணைக்கப்பட்ட படுக்கைகளை மருத்துவமனை செயல்படுத்துவது குறித்து, விஜயா மெடிக்கல் & எஜுகேஷனல் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி திருமதி. பி. பாரதி ரெட்டி, "நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம். Dozee' - இன் Al-ஐ அடிப்படையாகக் கொண்ட தொலைநோயாளி கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு, நோயாளிகளின் தொடர்ச்சியான தொலைநிலை கண்காணிப்பு மற்றும் அவர்களின் நிலை ஏதாவது மோசமடைவதை முன்கூட்டியே எச்சரிப்பதன் மூலம் இதை அடைய எங்களுக்கு உதவும். இது மருத்துவ விளைவுகளை மேம்படுத்தவும், எங்கள் நோயாளிகளுக்கு சிறந்த சாத்தியமான பராமரிப்பை வழங்கவும் எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். Dozee -இன் நடைமுறைப்படுத்தல் ஆனது, நோயாளிகளின் பராமரிப்பு வழங்கப்படுவதை மாற்றும், மேலும் இந்த மாற்றத்தில் முன்னணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று கூறினார்.
இந்த நிகழ்வான கூட்டாண்மை குறித்து, Dozee -இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் திரு. கௌரவ் பர்ச்சானி, "நீண்டகால தரமான சுகாதாரப் பராமரிப்புக்கு பெயர் பெற்ற ஒரு முன்னோடி நிறுவனமான விஜயா மருத்துவமனை குழுமத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நோயாளியின் பாதுகாப்பை அதிகரிக்கும், செவிலியர் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் சிறந்த மருத்துவ முடிவுகளை வழங்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்பை உருவாக்க, சுகாதார நிபுணர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறோம். எனவே, தொடர்ச்சியான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை இணைத்துக்கொள்வது அனைவருக்கும் தரமான சுகாதாரப் பயணத்தின் முக்கியப் பகுதிகளாகும்."என்று கூறினார்.
சுகாதார பராமரிப்பு துறையை மேம்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக உயர்தரப் பராமரிப்பை வழங்குவதற்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொழில்நுட்பத்தை, Dozee பயன்படுத்துகிறது. 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் Dozee மூலம் மேம்பட்ட RPM இல் பயிற்சி பெற்று சுகாதார வளத்தை மேம்படுத்தவும் மற்றும் தொழில்துறையில் ஒரு முழுமையான புரட்சியை ஏற்படுத்தவும் பயிற்சி பெற்றுள்ளனர். இதுவரை, 370 க்கும் அதிகமான மருத்துவமனைகளில் 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் Dozee தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. Dozee, மேம்பட்ட மருத்துவ நிலைமைகள் மற்றும் நோயாளி அனுபவங்களை உருவாக்கி, மிகவும் பயனுள்ள நோயாளி சார்ந்த கவனிப்பை வழங்குவதற்கான கருவிகளை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்குகிறது. சுகாதார பராமரிப்பு துறையில் அடிமட்ட சவால்களை எதிர்கொள்வதில் Dozee இன் பங்களிப்பு ஒரு புதிய வகையான சுகாதார பராமரிப்பு அமைப்புக்கு வழி வகுக்கிறது, இது நோயாளியை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த சுகாதார விளைவுகளையும் வழங்குதலையும் உருவாக்குகிறது.
கருத்துகள் இல்லை