சற்று முன்



D 3 திரை விமர்சனம் !


ஒரு பெண் வீட்டில் தனியாக இருக்கிறார் அப்போது அவருக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து போன் வருகிறது அதனை எடுத்து காதில் வைத்து , ஒரு மாதிரி நடந்து வெளியே செல்கிறார். அப்போது ஒரு லாரி அவர் மீது மோதி அங்கேயே இறந்துவிடுறார்.

அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து 2021 ம் ஆண்டு அங்கு உள்ள D3 போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு பதவி ஏற்கிறார் கதையின் நாயகன் விக்ரம் , அப்போது 2018 ம் ஆண்டு நடந்த மாதிரியே சிலசம்பவங்கள் நடக்கிறது, அதனை கண்டுபிடித்த விக்ரம் இது எதற்காக நடக்கிறது இதன் பின்னணி என்ன , இதன் பின்னல் இருப்பது யார் என தேட தொடங்குகிறார் , ஆனால் பல பிரச்சனைகள் இவருக்கு வந்துகொண்டே இருக்கிறது . விக்ரம் அனைத்தையும் சமாளித்து இந்த செயலுக்கு பின்னணி என்ன மற்றும் இதனை செய்தது யார் என கண்டுபிடித்தாரா ?இல்லையா ? எனபதுதான் படத்தின் மீதி கதை.

இப்படத்தில் சஸ்பென்ஸ் இருக்கு குறையில்லை.

முன்னணி நடிகரான சார்லி கதாபாத்திரம் நம் மனதை தொட்டுவிட்டது.

மிக அற்புதமாக நடித்துள்ளார் சார்லி.

சார்லி கதாபாத்திரம் மிக அற்புதம்.

நடிகை வித்யா பிரதீப் கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் மிகக் கச்சிதமாக நடித்துள்ளார். 

இந்த படத்தை இயக்குனர் பாலாஜி இயக்கியுள்ளார். இயக்குனருக்கு பாராட்டுகள். நல்ல சஸ்பென்ஸ் திரில்லரை கொடுத்துள்ளார்.

நடிகர் பிரஜின் நடிப்பு பிரமாதம்.

அனைத்து கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள். அனைவரின் நடிப்பு அற்புதம்.

ஸ்ரீஜித் எடவானா- வின் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இப்படம் சமூகத்திற்கு தேவையான திரைப்படம் தான் ஏனென்றால் இது போன்ற நிகழ்வுகள் சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது ரத்தத்திற்காக சில உடல் உறுப்பு தானத்திற்காக தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சில ஆசாமிகள் உள்ளனர் பெரிய முதலாளிகளும் உள்ளனர் அதையெல்லாம் உணர்த்தும் திரைப்படம் தான் இப்படம். D 3 திரைப்படம்.

யாரை நம்புவது என்று தெரியாமல் கிளைமாக்ஸ் காட்சிகள் சஸ்பென்ஸ் மற்றும் துரோகத்தை உணரும்  விக்ரம். நண்பன் துரோகி ஆகிறான் எல்லாரையும் இழந்து தான் செய்யும் தொழிலே தெய்வம் என்று  சட்டம் கடமையை செய்யும் என்று உணர்த்தியுள்ளார். சண்டை காட்சிகள் ஓகே. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இப்படம் குற்றாலத்தை சுற்றி எடுத்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் இப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சஸ்பென்ஸ் திரைப்படம்.

அனைவரும் பார்க்கக் கூடிய  திரைப்படம்.

Rating : 3 .5 / 5


கருத்துகள் இல்லை