சற்று முன்



கப்ஜா திரை விமர்சனம் !

 

உபேந்திரா நடிப்பில் கப்ஜா  திரைப்படம்

கன்னட மொழியில் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் கப்ஜா. இந்த படத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஆன உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார். நடித்திருக்கிறார்கள். இயக்குனர் சந்துரு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஸ்ரேயா சரண், முரளி சர்மா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ரவி பஸ்சூர் இசையமைத்திருக்கிறார். கன்னட மொழியில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் கப்ஜா படம்.

படத்தில் 1945 ஆம் ஆண்டு தொடங்கி 1971 ஆம் காலகட்டத்தில் நடைபெறும் காட்சிகளாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர் உடைய மகன் உபேந்திரா. இவர் விமானப்படையில் உடைய முடித்துவிட்டு பணிக்கு செல்வதற்கு முன் தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார். அவருடைய கிராமம் அமராபுரம். அங்கு தொடங்கி பல இடங்களிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு பின் மகதூர் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் இருக்கிறார்கள். இதற்கிடையில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

பின் பகதூர் சாம்ராஜ்யத்திற்கு அமராபுரம் தொகுதியில் கலீல் ராஜாவாக இருக்கிறார். இவர் தேர்தலில் தன் மகனை களம் இறக்க திட்டமிட்டு வெளிநாட்டில் இருந்து அழைத்து வருகிறார். திட்டமிட்டு எதிர்பாராத விதமாக உபேந்திரா கலில் மகனை கொன்று விடுகிறார். இதனால் ஆவேசம் அடையும் கலில் பழிக்கு பலியாக உபேந்திரா அண்ணனை கொள்கிறார். தன் அண்ணன் மரணத்திற்கு பலித்தீர்க்க களம் இறங்கினார் உபேந்திரா. 

படம் முழுக்க உபேந்திரா மீது தான் நகர்கிறது. கேஜிஎப் இன்ஸ்பிரஷனில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆனால், மொத்த கேமரா, திரைக்கதை, இசை அனைத்தும் ஓகே. படம் முழுக்க பத்து பதினைந்து பேரை சுட்டுக் கொள்வதும், வெட்டி கொள்வதும் என்று இருக்கிறார்கள். உபேந்திரா சாதுவாக அமைதியாக இருந்து மாவீரனாக மாறுவது தான் கதை. 

ஸ்ரேயா சரண் அவருடைய அழகு இன்னும் குறையாமல் ஸ்கிரீனில் காட்சியளித்திருக்கிறார்

ஸ்ரேயா சரண் காதல் காட்சிகள் மற்றும் அம்மா சென்டிமெண்டில் நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் அற்புதம். 

படத்தினுடைய இசை கே ஜி எஃப் சி இசை போல தான் இருக்கிறது. இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை என்றே சொல்லலாம். தமிழ் டப்பிங்கில் என்ன சொல்ல சொல்லலாம். என்பதை புரிந்து கொள்ளவே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. காரணம், அவ்வளவு கதாபாத்திரங்களின் பெயர்கள் படத்தில் காண்பிக்கப்படுகிறது. ஆனால், படத்தில் சுவாரசியத்தை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க கொஞ்சம் அதிகமாகவே வன்முறை காட்சிகள் நிறைந்து இருக்கிறது. டெக்னிக்கல் வேலைப்பாடு மட்டுமே படத்திற்கு ஆறுதலாக இருக்கிறது.

சில காட்சிகளில் மட்டும் கிச்சா சுதீப் தோன்றுகிறார் மாசாக உள்ளார்.

சிவராஜ்குமார் வரும் காட்சிகளில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கும் கிளைமாக்ஸ் தோன்றுகிறார் சிவராஜ் குமார்  அடுத்த பார்ட் 2 வெயிட்டிங் என்று கூறலாம் சிவராஜ் குமார் காக தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு பிரமாதம்.

 ஒன் மேன் ஆர்மியாக படத்தை கொண்டு சென்று இருக்கிறார் உபேந்திரா .

மொத்தத்தில்  கேங்ஸ்டர் படம் இதுவரை வந்த கேங்ஸ்டர் படங்களில் வரிசையில் கப்ஜா வும் சேரும் . 

அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5


கருத்துகள் இல்லை