ஜீ5 வெப் சீரியஸ் செங்களம் விமர்சனம் !
ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள புதிய வெப் தொடர்தான் செங்களம். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ள இந்த வெப் தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ் மற்றும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சத்யமுர்த்தி என்பவரின் குடும்பம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேராமல், விருதுநகர் சேர்மனாக இருந்துகொண்டு அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகின்றனர்அப்படி அந்த குடும்ப வழியில் தற்போது சேர்மனாக இருப்பவர்தான் ராஜமாணிக்கம், இவரை ஒரு கும்பல் கொலைசெய்துவிடுகிறது. எதற்காக கொலை செய்யப்படுகிறது அது விபத்தா கொலையா என்பது நான் கதை ஒரு பக்கம்.
ராயர் மற்றும் அவரின் சகோதரர்கள் சேர்ந்து ஒருசில அரசியல்வாதிகளை கொலை செய்கின்றனர் அவர்கள் எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர் என்பதும் ராஜமாணிக்கத்தை யார் கொலை செய்தார்கள் என்பதும், சேர்மேன் பதவியில் அடுத்து யார் விருதுநகரை ஆளப்போகிறார் என அடுத்தடுத்து பல திருப்பங்களை கொண்டத்துதான் இந்த செங்களம்.
வாணி போஜன் நடிப்பு பிரமாதம் கதாபாத்திரங்களை நன்றாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் வாணி போஜன்.
வாணி போஜன் உடன் தோழியாக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளார்.
கலையரசன் கதாபாத்திரம் மற்றும் சகோதரர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
நல்ல சஸ்பென்ஸ் ஆக இத்தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர்.
அடுத்து என்ன என்று நம்மால் யூகிக்க முடியாமல் இத்தொடரை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.
கடைசி வரை ராஜமாணிக்கத்தை யார் கொன்றார் என்பது நமக்குத் தெரியவில்லை அது ஒன்றுதான் குறை.
ராயர் க்கு கடைசியில் அனைத்தும் தெரிய வருகிறது இத்துடன் முடிவு.
செங்களம் பார்ட் ரெண்டு காக காத்திருப்போம்.
ஆக மொத்தத்தில் இத்தொடர் அனைவரும் பார்க்கக்கூடிய வெப் சீரியஸ் செங்களம்.
இந்த கதையினை இயக்குனர் SR. பிரபாகரன் இயக்கியுள்ளார்.
Rating : 4 / 5
கருத்துகள் இல்லை