சற்று முன்



பிசாசினி’ – மார்ச் 27 முதல் புதிய தொடரை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி !


பிசாசினி’ – மார்ச் 27 முதல் புதிய தொடரை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி !


பார்வையாளர்களை அமானுஷ்ய பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.



கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; பொம்மி பி.ஏ.பி.எல், நாகினி தொடர்களுடன் ‘பிசாசினி’ தொடரையும் பார்த்து மகிழுங்கள்.

 



சென்னை, மார்ச் 28,2023 - வயாகாம்18 நிறுவனத்தின் பொழுபோக்கு தமிழ் சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிதாக அமானுஷ்ய தொடரான ‘பிசாசினி’ என்னும் தொடரை மார்ச் 27ம் தேதி  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.  



மிகவும் பிரபல இந்தி தொடரான பிசாசினி தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழக பார்வையாளர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. கற்பனைக் கதையான இது பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும். இந்தத் தொடர் ராணி என்ற பெண்ணின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. அவள் தன்னிடம் அசாதாரண சக்திகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு செயல்படுகிறாள். அவ்வாறு செய்யும்போது அவள் வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதையாகும். இந்தத் தொடரில் பிரமிக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர் மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காதல், பழிவாங்குதல் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போட்டி என அனைத்தும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன. நல்ல கதை களத்தைக் கொண்டுள்ள இந்த தொடர் பார்வையாளர்களை அவர்களின் இருக்கை நுனிக்கே கொண்டு வரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரே மிட்டல், ரேமன் சிங், அமித் மெஹ்ரா மற்றும் சுஷில் பராஷர் போன்ற மற்ற கலைஞர்கள் இந்த புதிய தொடரில் புதிரான மாயாஜால உலகத்தில் உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். இந்த தொடர் வரும் 27–ந்தேதி இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. கற்பனை மிகுந்த அமானுஷ்ய உலகில் மறக்க முடியாத பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

பிசாசினி தொடர் குறித்து இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நைரா பானர்ஜி கூறுகையில், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ள எங்களின் புதிய தொடர் பார்வையாளர்களிடையே எப்படியொரு வரவேற்பை பெறப்போகிறது என்பது குறித்து நாங்கள் அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஏனெனில் கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சி அதன் பார்வையாளர்களுக்கு சிறந்ததைத் தவிர வேறு எதையும் வழங்காது. இந்த தொடரின் கதை மற்றும் அது எடுக்கப்பட்ட விதம் ஆகியவை பார்வையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது. எனவே இந்த தொடர் சூப்பர் ஹிட்டாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த தொடர் குறித்து நடித்துள்ள ஹர்ஷ் ராஜ்புத் கூறுகையில், பிசாசினி தொடர் புதுமையானதாகவும் கற்பனைகள் நிறைந்ததாகவும் இருக்கும், மேலும் இது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த தொடரை மக்கள் பார்த்து ரசிக்கும்போது அது எங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று நாங்கள் உறுதியாக கருதுவோம் என்று தெரிவித்தார்.

 பிசாசினி தொடரை மார்ச் 27,  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்..

இந்த தொடருடன் இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடர்களான பொம்மி பி.ஏ.பி.எல் மற்றும் நாகினி ஆகிய தொடர்களும் ஒளிபரப்பாக உள்ளது. இதில் பொம்மி பி.ஏ.பி.எல். தொடரில் அவுரா பட்நாகர் படோனி, பிரவிஷ்த் மிஸ்ரா, ரிஷி குரானா, சந்தன் கே ஆனந்த், பிரனாலி ரத்தோட் ஆகியோர் நடித்துள்ள, இந்த தொடர் ஏப்ரல் 3ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தேஜஸ்வி பிரகாஷ், சிம்பா நாக்பால், ஊர்வசி தோலாகியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகினி தொடர் மார்ச் 27, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த விறுவிறுப்பான த்ரில்லர் கதைகளத்தை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள்.


கருத்துகள் இல்லை