சற்று முன்



24 மணி நேரமும் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை !

 

24 மணி நேரமும் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை !

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், செம்மங்குடி ஊராட்சியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை நடைப்பெற்று வருகிறது.  ஸ்ப்ரைட் (Sprit) சோடாவில் போதை மாத்திரை கலந்து‌ பேக்கட்டில் அடைத்து அதற்கு பாண்டி ஐஸ் என்ற பெயரில் விற்பனை செய்வதாக அப்பகுதியில்‌ உள்ள பெண்களும், சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைவரும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து  சீர்காழி  மது விலக்கு பிரிவு துறையினரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்த விஷ சாராயத்தை குடிப்பதால் மனநல பாதிப்பு, கை,கால் இழக்கும் சூழ்நிலை, இளைஞர்கள் வேலைக்கு செல்லாத சூழ்நிலை, இதை வெறும் வயிற்றில் குடிப்பதால் உயிரிழப்பு நிகழும் என இப்பகுதி பெண்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்து சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று இப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர். தொடர் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை பாயுமா? பார்ப்போம்.


கருத்துகள் இல்லை