சற்று முன்



இந்தியன் யோகா அசோசியேஷன் இணைந்து வழங்கிய நற்சிந்தனை வட்டத்தின் 123-வது மாதாந்திர நிகழ்ச்சி !

 

உலக மகளி்ர் தினத்தை முன்னிட்டு நற்சிந்தனை வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு - இந்தியன் யோகா அசோசியேஷன் இணைந்து வழங்கிய நற்சிந்தனை வட்டத்தின் 123-வது மாதாந்திர நிகழ்ச்சி 19/03/2023 ஞாயிறன்று மாலை சென்னை, வளசரவாக்கம், காமகோடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீகாமகோடி  தியான மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

 முன்னதாக நற்சிந்தனை வட்டத்தின் மகளிர் குழுவினர் குத்துவிளக்கேற்றிட, நற்சிந்தனை வட்டத்தின் யோகா இயக்குனர் திருமதி T.வள்ளி வரவேற்புரையும், நற்சிந்தனை வட்டத்தின் தலைவர் திரு.R.பாலன் தலைமை உரையும் நிகழ்த்தி விழாவினை தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர், முனைவர், திரு.R.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்ததோடு மட்டுமின்றி "பெண்களின் ஆரோக்கிய மேம்பாடு அக்காலத்திலா! இக்காலத்திலா!" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தின் நடுவராகவும்  இருந்து சிறப்பானதொரு தீர்ப்பையும் வழங்கினார். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள், யோகா போட்டிகள் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தினமும் காலை 6மணி முதல் 7மணி வரையும் மாலை 6.30 மணி முதல் 7மணி வரை நற்சிந்தனை வட்டத்தின் சார்பாக கடந்த 1062 நாட்களாக இலவசமாக, இணையதளம் மூலமாக யோகா வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.


கருத்துகள் இல்லை