சற்று முன்



Single ஷங்கரும் smartphone சிம்ரனும் திரை விமர்சனம் !

 

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி இயக்கத்தால் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்”. இப்படத்தில் மகாபா, பாடகர் மனோ, சிம்ரனும்”. பாலா, ஷாரா, திவ்யா கணேஷ் போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படம் இன்று வெளியாகி இருக்கிறது.

இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் ஸ்விக்கியில் வேலை பார்த்து வருகிறார் சிவா. 

இந்த நிலையில் தான் மொரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஷா ரா இருந்து கசக்கி பிழிந்து செயற்கை நுண்ணறிவுவுடன் பெண்ணின் உணர்வுகளுடன் கூட ஒரு ஸ்மார்ட்போனை ஷாரா தயாரிக்கிறார். இந்த ஸ்மார்ட் போன் எப்படியோ சிவாவின் கைகளில் கிடைத்து விடுகிறது. அந்த ஸ்மார்ட் போன் மூலம் சிவாவின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.

சிவா தான் ஆசைப்பட்ட பல விஷியங்களை அந்த ஸ்மார்ட்போன் மூலம் தீர்த்துக்கொள்கிறார். அதே சமயத்தில் இப்படி சிவாவுக்கு உதவி செய்யும் போது சிம்ரனுக்கு சிவாவின் மீது செய்யும் வந்து விடுகிறது. ஆனால் இந்த காதலை சிவா மறுக்கவே அந்த ஸ்மார்ட்போன் சிம்ரன் செய்யும் லீலைகளினால் சிவாவிற்கு என்ன ஆபத்து வரப்போகிறது என்பதை தான் மையமாக கொண்டு இப்படமானது உருவாகியுள்ளது.

படத்தில் என்னதான் பல லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அதனை விடுத்து படத்தை ரசிக்கவும், சிரிக்கவும் முடிந்தது. தொழிநுட்ப வளர்ச்சி தற்போது பன்மடங்கு பெருகி விட்டது கடந்த தற்போது ஆண்டுகளில் மட்டுமே தொழிநுட்பம் பெரிய அளவில் பெருகி தற்போது AI உலகத்தை ஆளா தொடங்கி விட்டது அதனை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் இதனை மையமாக வைத்துதான் இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது.

பல படங்களுக்கு பின்னர் இப்படத்தில் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா மீண்டும் திரைக்கு திரும்பிய அனுபவத்தை இப்படம் கொடுத்திருக்கிறது. அதே போல விஜய் டிவி  புகழ் மகாபா கொடுத்திருக்கிறது. ஆனந்திற்கு இப்படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்து அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதோடு சிவாவின் அப்பாவாக வரும் பாடகர் மனோ பல ஆண்டுகள் கழித்து தான் ஒரு பாடகர் மட்டுமல்ல ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஆனால் கதையின் உண்மையான காதலியாக வரும் மேகா ஆகாஷிற்கு குறைவான இடமே கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஒரு சாதாரண பெண்ணாக என்ன செய்ய முடியுமோ அதனை செய்திருக்கிறார். என்ன பின்னணி இசை சரியாக பொருந்தியிருக்கிறது. அதே போல திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்தியதன் மூலம் பார்வையாளர்களுக்கு போரடிக்காமல் வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் 

பாடகர் மனோவின் நடிப்பு பிரமாதம் பல வருடங்களுக்கு அப்புறம் நாம் காண்கிறோம். மேகா ஆகாஷ் இருக்கு வரும் காதல் காட்சிகள் அற்புதம் தன் காதலை ஏற்றுக் கொள் என்று சிவாவிடம் கூறும்போது சிவா அதை தவிர்ப்பது போன்ற காட்சிகள் நீ ஒரு ஸ்மார்ட் போன் தான் பெண் அல்ல என்று கூறும் வசனங்கள் நம் மனதில்  தொடுகின்றன வசனங்கள். 

ஆக மொத்தத்தில் இப்படம் பெரியவர் முதல் சிறியவர் வரை சிரிக்க வைத்து நம்மை அழைத்துச் செல்லும் வீட்டிற்கு குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி அயன் மேன் ஹல்க் போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் கிளைமாக்ஸ் இடம்பெற்றுள்ளன குழந்தைகளுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது.

லாஜிக் இல்லாமல் இப்படத்தை பார்த்தால் தரமான படம்.

Rating - 3.5 /5



கருத்துகள் இல்லை