சற்று முன்



பொம்மை நாயகி திரைவிமர்சனம் !



தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு

இந்நிலையில் தற்போது இவர் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை நாயகி. இப்படத்தை ஷாம் இயக்க, நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் ஒடுக்கப்பட்ட இனத்தை நிறுவனம் அப்பா தன்னுடைய மகளுக்கு நேர்ந்த அநீதியை எப்படி தட்டி கேட்கிறார் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்

தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்கிறார் யோகிபாபு. யோகி பாபு பாட்டியலின பெண்ணின் மகனாக பிறக்கிறார். ஆனால் இவரின் தாய் மகனாக ஜாதியில் உள்ள ஒருவரின் இரண்டாவது மனைவி ஆவார். இதனால் சொந்த அண்ணனாலும், சொந்த ஊரில் உள்ள மக்களாலும் பாகுபாட்டுடன் நடத்தப் படுகிறார். ஆனால் அந்த கடையின் உரிமையாளர் உடல் நலக்குறைவின் காரணமாக கடையை மூடி விடுகிறார். இதனால் வேலை இல்லாமல் இருக்கிறார் யோகி பாபு.

இப்படி பட்ட நிலையில் அவரது ஊரில் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவில் யோகி பாபுவின் 9 வயது மகளை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி சிலர் ஆனால் அதிலிருந்து தன்னுடைய மகளை காப்பாற்றி விடுகிறார் யோகிபாபு. இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மகளுக்கு நடந்தவற்றை தட்டி கேட்க ஊரில் மக்கள் யாரும் முன்வராத காரணத்தினால் காவல் துறையின் உதவியை நாடுகிறார்? ஆனால் அங்கே புகாரை வாங்க மறுத்தால் நீதிமன்றத்திற்க்கே செல்கிறார் யோகிபாபு. இப்படி நீதி துறையை நாடும் யோகி பாபுவுக்கு நியாயம் கிடைத்ததா? என்பதுதான் மீதி கதை.

 இப்படத்தில் சாதியையும், சிறுமி பாலியல் வன்கொடுமையையும் ஒன்றாக படமாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அதில் சில தடு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. படத்தின் கதையையும், கதாபாத்திரங்களையும் யோசித்த ஏற்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரங்களுக்கு உணர்வு கொடுக்கும் படி படத்தை எடுத்திருக்கலாம். யோகி பாபு இப்படத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் உள்ள அப்பாவி அப்பாவாக மிகவும் திறமையாக நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபுவின் மனைவியாக வரும் சுபத்ராவும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறது.

இப்படத்தில் ஸ்ரீமதி என்ற கதாபாத்திரத்தில் வரும் சிறுமி நடிப்பிலும், நீதிமன்ற காட்சியில் பேசும் வசனத்திலும் மிரள வைத்திருக்கிறார். ஒரு சமூகத்தில் பெண் படிதால் அந்த சமூகமே சமூகத்தில் போன்ற கருத்துக்களை கூறியது பாராட்டுகளை பெறுகிறது. மேலும் இப்படத்தில் சந்திரமூர்த்தியின் பின்னணி இசை பிரமாதம். ஆனால் இரண்டாம் பத்தியில் கதையில் சிறிய தொய்வு ஏற்படுகிறது. படம் முடிந்து விட்டது என்றிருந்த நிலையில் திடீரென மற்றொரு கிளைமாக்ஸ் வருகிறது. மேலும் படத்தின் இறுதியில் பெரிய ட்விஸ்ட் வைத்து படத்தை முடிப்பார்கள் என்றிருந்த நிலையில் செயற்கைத் தனமாக படம் முடிந்தது ஏமாற்றமே.

யோகிபாபு பாபு நடிப்பில் அசரவைக்கிறார்.’ நாம் யோகி பாபுவை ஒரு காமெடியனாக பார்த்துள்ளோம் இப்படத்தில் நாம் இதுவரை காணாத யோகி பாபுவை காணுவோம் திரையில்.

 ஒரு குழந்தையின் தந்தையாக மிக அற்புதமாக நடித்துள்ளார் யோகி பாபு. ஒளிப்பதிவு, பின்னணி இசை பிரமாதம் வசனங்களில் பின்னியிருக்கின்றனர். 

“பாரதமாதா” என பெண்கள் பெயரால் போற்றப்படும் இந்த பாரத நாட்டில் தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலைமை என்னவாக இருக்கிறது நாட்டில் என்பதை அப்பட்டமாக சொல்கிறது இந்த “பொம்மை நாயகி”.

Rating: 3.5 / 5




கருத்துகள் இல்லை