சற்று முன்



டாடா திரை விமர்சனம் !

 

நடிகர் கவின் தற்போது  நடித்துள்ள படம் "டாடா " திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை கணேஷ் கே பாபு அறிமுக இயக்குனராக படத்தை இயக்கியுள்ளார். பாபு இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார். கவின் இப்படத்தில் மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில்  அபர்ணாதாஸ்.நடித்துள்ளார்.

 மேலும் பாக்யராஜ்,  ஐஸ்வர்யா லட்சிமி போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தந்தை மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த “டாடா” படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

இப்படத்தில் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் ஊதாரியாக சுற்றும் ஒரு கல்லூரி மாணவராக மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் கவின் வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சிந்து என்ற இவர் நெருங்கி பழகி வருகிறார் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர் இந்த காதல் ஒரு கட்டத்தில் கர்ப்பமாக மாறுகிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் கவின் திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே பொறுப்பில்லாமல் சுற்றுகிறார். இதனை பார்த்த சிந்து வருத்தமடைகிறார். இப்படி இருக்கும் நேரத்தில் ஒரு சண்டை வருகிறது.

அந்த சண்டையில் “நீ செத்துரு” என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கதாநாயகன். இப்படி செல்லும் நேரத்தில் சிந்துவிற்கு கர்ப்ப வலி வந்து மணிகண்டனுக்கு போன் செய்கிறார். வலி அழைப்பை கண்டு கொள்ளாமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுக்கிறார். இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதனை மருத்துவமனையில் விட்டுவிட்டு சிந்து தன்னுடைய தாயின் வீட்டிற்கு செல்கிறார். இப்படி செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ளவும் மிகப்பெரிய பொறுப்பு மணிகண்டனிற்க்கு வருகிறது. இந்த நிலையில் குழந்தையை வளர்க்கும் மணிகண்டன் திருந்தினாரா? குழந்தையை நல்ல படியாக வளர்த்தார? மீண்டும் தன்னுடைய மனைவியை சந்தித்தாரா? என்பதுதான் மீதி கதை. இப்படத்தில் தந்தை மகன் பாசத்தில் பிச்சு உதறி இருக்கிறார் கவின். 

குழந்தை பிறந்தவுடன் சிந்து மருத்துவமனையில் இருந்து விட்டு செல்வார். குழந்தை மட்டும் மருத்துவமனையில் இருக்கும் குழந்தையை கவின் பார்க்க மருத்துவமனைக்கு வரும்போது சிந்து இல்லை குழந்தை எடுத்து சென்று என்ன பண்றது தெரியாமல் ஒரு அனாதை இல்லத்திற்கு அன்னை இல்லத்திற்கு கொண்டு செல்வார் ஆட்டோவில் அங்கு போய் ஒரு குப்பை தொட்டியில் இருந்தது யார் வைத்தார்கள் தெரியவில்லை என்று கூறி விட்டுட்டு திரும்பி செல்லும் போது அவர் உணரும் தன் குழந்தையை அனாதையாக விட்டு செல்கிறோமே என்ற காட்சிகள் நம்மை கலங்க வைக்கின்றன திரும்பி அந்த இல்லத்திற்கு அனாதை இல்லத்திற்கு சென்று என் குழந்தை தான் கொடுங்கள் என்று போராடி தன் குழந்தையை பெற்று வருகிறார் கைப்பற்றிக வருகிறார். தாய் இல்லாமல்  தந்தையாக குழந்தையை வளர்க்கிறார் மணிகண்டன் அற்புதமாக வளர்த்துள்ளார்  தாய் இல்லாமல் .

 அதே போல தாயாக வரும் அபர்ணாவும் தன்னுடைய நடிப்பினால் மக்களை கவர்ந்திருக்கின்றார். இருந்தாலும் நாயகி அபர்ணாவுக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. மேலும் இப்படத்தில் சில கஷ்டமான நேரங்களில் சிரிப்பு எனும் மேஜிக்கை தூவும் பஞ்ச் கதாபாத்திரமாகவும், அறிவுரை சொல்லும் கதாபாத்திரமாகவும் நடித்திருக்கிறார் விடிவி கணேஷ். விடிவி கணேஷ் சிறந்த கதாபாத்திரமாக நடித்துள்ளார் மிகக் கச்சிதமாக பொருந்தியுள்ளார் .

படம் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. அறிமுக இயக்குனராக இருந்தாலும் திரைக்கதையை லாபகரமாக இயக்கி இருக்கிறார் கணேஷ் கே.பாபு. கதாபாத்திரங்கள் நன்றாக நடித்திருக்கின்றனர். மொத்தத்தில் நிறைவான உணர்வை தரக்கூடிய தந்தை நடித்திருக்கின்றனர். பாச போராட்ட படமாக “டாடா” படம் வந்திருக்கிறது.

மொத்தத்தில் தாய் இல்லாமல் ஒரு தந்தை. தன் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த டாடா படம்.

Rating3/5 : 5





கருத்துகள் இல்லை