சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா !
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா அவர்களை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மனோபாலா அவர்கள் சிகிச்சை பெற்றதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் உற்சாகமாக உரையாடினார். இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார்.
கருத்துகள் இல்லை