சற்று முன்



திரிஷாவின் ராங்கி விமர்சனம் !

 

சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.  ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில், சுபாஷ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் ராங்கி. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படம்  வெளியாகிய நிலையில் எப்படி இருக்கிறது? என்பதை பாப்போம் வாருங்கள்.

திரிஷா தையல் நாயகி என்ற கதாபாத்திரத்தில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். இந்த நிலையில் பல சோசியல் மீடியாக்களில் ஒன்றான பேஸ்புக்கில் போலி கணக்கை உபயோகித்து ஒரு பெண் ஆண்களுடன் பேசி வருகிறார். அந்த கணக்கின் ஃப்ரோபைல் பிச்சரில் திரிஷாவின் அண்ணன் மகள் புகைப்படம் இருக்கிறது. இதனை கவனித்த திரிஷா அந்த கணக்கில் பேச தொடங்குகிறார். அதில் ஒருவர் தீவிரவாதி எனவே தன்னுடைய அண்ணன் மகளை பிரச்னையில் இருந்து காப்பாற்ற திரிஷா அந்த கணக்கில் பேசும்போது பல திருப்பங்கள் ஏற்ப்படுகின்றன. இதிலிருந்து எப்படி திரிஷா வெளியில் வந்தார், யார் அந்த தீவிரவாதிகள் என்பதுதான் மீதி கதை.

படத்தின் பெயருக்கு கேற்றார் போல் திரிஷா தான் ஒரு முன்னணி நடிகை என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். 

திரிஷா போலீஸிடம் பேசும்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் திரிஷாவிடம் தவறாக பேசிய  வார்த்தைகள் 

அனைத்தும் வீடியோவாக எடுத்து அவரது சேனலில் வெளியிட மக்கள் அதைப் பார்க்க போலீஸ்  வந்து இவரை மிரட்டினாலும் இவர் அதைக் கண்டு கொள்ளவில்லை 

ஒரு  ரிப்போட்டர் ஆக கம்பீரமாக போலீசாரிடம் பேசும் விதம் அற்புதம்.

திரிஷா தன் அண்ணன் மகளின் தோழி தான் ஃபேஸ்புக்கில் புகைப்படத்தை வைத்து சேட் செய்துள்ளார் அந்த தோழி சில ஆண்களிடம் சாட் செய்துள்ளார்.

இந்த தவறை செய்துள்ளார் என்று தெரிந்து அந்தப் பெண்ணிடம் அவர்  கையாளர விதம் அற்புதம்.

தன் அண்ணன் மகளை சந்தேகப்பட்டு திரிஷா செய்யும் காட்சிகள் நம்மை கலங்க வைக்கின்றன. தன் அண்ணன் மகள் தவறு செய்யவில்லை என்று தெரிந்து மகிழ்ச்சி அடைகிறார்.

அனைத்தும் முடிந்து விட்டது என்ற நினைக்கும் திரிஷா

அப்போதுதான் டெரரிஸ்ட் இடம் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது அந்த ப்ரொபைலுக்கு பேஸ்புக்கில்.

அது டெரரிஸ்ட் என்று த்ரிஷாவுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை ஒரு நண்பனாக சேட் செய்யும் அந்த டெரரிஸ்ட் அவன் ஒரு போராளி.

ஆரம்பத்தில் பேசும் திரிஷா ஒரு காதலன் காதலி போல இருவரும் சேட் செய்கின்றனர்.

அந்த டெரரிஸ்ட் திரிஷாவின் அண்ணன் மகள் தான் நம்முடன் சேட் செய்கிறாள் என்று நினைத்து காதலிக்கிறான்  திரிஷா தன் அண்ணன் மகள் போல் சாட் செய்கிறாள். இது உளவுத்துறை  தெரிய வர திரிஷா சந்திக்கும் பிரச்சனைகள் பல.

கடைசி வரை அந்த டெரரிஸ்ட் க்கு திரிஷா தான் சாட் செய்தால் என்று தெரியவில்லை. அந்த டெரரிஸ்ட் இருக்கிற நாட்டிற்கு உளவுத்துறை , திரிஷா ,அண்ணன் மகள் சென்று அவனைப் பார்ப்பதற்காக செல்கின்றனர்.

அங்கு நடக்கும் டெரரிஸ்டுக்கும் போலீசுக்கும் சண்டை காட்சிகள் அற்புதம் தன் காதலிக்காக அவன் உயிர் தியாகம் செய்கிறான் கடைசிவரை அந்த பெண்ணிடம் அவனால் பேச முடியவில்லை. ஆனால் திரிஷாவின் அண்ணன் மகளை ஒரு தீவிரவாதி டெரரிஸ்ட் சுடும்போது அந்த குண்டை இவன் வாங்கிக்கிறான் அந்தப் பெண் மடியிலே உயிர் விடுகிறான்.

அவன் கடைசியில் கூறும் வார்த்தை எனக்காக கண்ணீர் விட நீ ஒருத்தி இருக்கிறாய் என்று சொல்லும் காட்சி நம்மை கலங்க வைக்கின்றது உண்மையான காதல் என்றும் தோற்கவில்லை என்ற ஒரு பீல் இப்படம் நமக்கு புரிய வைக்கிறது. 

கடைசியில் த்ரிஷா தான் அவனை காதலித்து இருப்பாள் மனதளவில் அவன் டெரரிஸ்ட் ஆக இருந்தாலும்

 வேற மதத்தை சார்ந்த இருந்தாலும் திரிஷா மனதளவில் அவனை காதலித்து இருப்பாள். திரிஷா சிந்தும் கண்ணீர் நமக்கு உணர்கிறது.

 தொழில்நுட்பம், அரசியல், காதல் என பல விதமான கருத்துக்கள் வந்தாலும் அதனை சரியாக பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் இணயத்தளத்தின் மூலம் செய்யும் குற்றங்களினால் மற்றவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், பத்திரிக்கை துறையை பற்றி கேள்வி எழுப்பிவதும், அரசியலை கடுமையாக விமர்சிப்பதுவுமாக இருக்கிறது.

இரண்டாம் பாதியில் தற்போது அரசியல் உள்ள நிலை, காதல், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு சாதாரண மனிதன் எப்படி தீவிரவாதியாக மாற்றப்படுகிறான் என்பதை மிகவும் நுட்பக்காக காட்சிப்படுத்தி படத்தை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் பேசப்பட்ட வசனங்கள் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்து. அதில் “தீவிரமாக அரசியல் செய்பவன் அரசியல்வாதி”, “தீவிரமாக போராடுபவன் தீவிரவாதி.” வென்றால் போராளிகள் தோற்றால் தீவிரவாதிகள் போன்ற வசனங்கள் மிரள வைக்கின்றன.

அதே போல இப்படத்தில் ஏ ஆர் முருகதாஸின் கதை ,இசையமைப்பாளர் சந்தியாவின் பின்னணி இசை, ஹாலிவுட் படத்திற்கு இணையான ஒளிப்பதிவு என அணைத்து துறைகளிலும் படக்குழுவினர் தங்களுடைய உழைப்பை காட்டியுள்ளது படத்தில் நன்றாகவே தெரிகிறது.

திரிஷாவின் நடிப்பு பிரமாதம்..

ஒளிப்பதிவில் ஒவவொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார் சக்திவேல்.

பின்னணி இசை அற்புதம்.

படத்தில் பேசப்படும் வசனங்கள் கதைக்கு பலம்.

மொத்தத்தில் திரிஷா நடித்த “ராங்கி” திரைப்படம் ரசிக்க மட்டும் வைக்க வில்லை சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

Rating : 3 .5 /5 


கருத்துகள் இல்லை