ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ !
ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட
‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ !
ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் பேனரின் கீழ் பொம்மக் சிவா தயாரித்துள்ள இப்படத்தை ராஜு துசா எழுதி இயக்கியுள்ளார்.
படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து முதல் பிரதி தயாராகிவிட்டது. விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விரைவில் டிரைலர் வெளியாகவிருக்கிறது.
ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்.
இந்த நேரத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.
தெலுங்கில் இப்படி ஒரு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த படத்தில் எந்த பச்சை மேட்டையும் பயன்படுத்தாமல் படமாக்கப்பட்டுள்ளது .
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
படத்தை முடித்து, முதல் பிரதியை படக்குழு பார்த்தபிறகு அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த முறையில் படம் வந்துள்ளதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிங்கிள் ஷாட்டில
ஒரே ஒரு கேரக்டரை வைத்து சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஹன்சிகா கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
முழுப் படமும் ஒரே கேரக்டரில் ஒரே ஷாட்டில் ஓடுவதால், முழுப் படத்தையும் தன் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் பார்வையாளர்களை படத்தோடு ஒன்றவைக்கவேண்டும்.
ஹன்சிகா இந்தபடத்தில் பாத்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் விதமாக படம் உருவாகியிருக்கிறது.
'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்' படம் ஹன்சிகாவின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.
ரீ-ரிக்கார்டிங்கிற்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் கதை சொல்லும் போது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பு கவனம் செலுத்தி BGM ஐ இசையமைத்திருக்கிறார் சாம்.
படம் முழுக்க தனது இசையால் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சாம்.
படம் ஒரே ஷாட்டில் ஓடுவதால், ஒளிப்பதிவாளர் கிஷோர் பாய்தாபு, புதிய லைட்டிங் நுட்பத்தை இந்தபடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் ராஜு துசா இந்த படத்தை
இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை மிகவும் கச்சிதமாக வடிவமைப்பதில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளனர்.
முதன்முறையாக குறைந்த பட்ச வசனங்களுடன் ஒரே கதாபாத்திரத்தில் ஒரே ஷாட்டில் படம் எடுக்க, தயாரிப்பாளருக்கு தைரியமும் ஆர்வமும் தேவை.
ஒரு துணிச்சலான தயாரிப்பாளர் பொம்மக் சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
விரைவில் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளிலும் வெவெளியாகவுள்ளது.
கருத்துகள் இல்லை