சற்று முன்



துணிவு திரைப்படம் பார்க்கச் சென்ற அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் உயிரிழப்பு !

 

துணிவு திரைப்படம் பார்க்கச் சென்ற அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் உயிரிழப்பு .


நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள துணிவு திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடி கீழே விழுந்து முதுகு தண்டில் எலும்புகள் நொறுங்கி  உயிரிழந்தார்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், நடிகை மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படமும், இயக்குனர் வம்சி பைடிபைலி‌ இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகி இருக்கிறது. 

இனறு காலை நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சியாக துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டது. 

தமிழ் திரைப்பட உலகில் இருதுருவங்களாக உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித்குமார் நடிகர் விஜய் இருவரின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு ஏட்டு வருடங்களுக்கு பிறகு வெளிவர இருப்பதால்  இருவர் தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து  திரையரங்குகளில் குவிந்தனர். 

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படத்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ரசிகர் ஒருவர் நடனம் ஆடியபடி கீழே குதித்துள்ளார். 

குதித்த ரசிகரின் முதுகுத்தண்டில் உள்ள எலும்புகள் நொறுங்கி கடுமையான காயம் ஏற்பட்டது. 

அந்த ரசிகரை உடனடியாக அவர் கே எம் சி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரசிகர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது சிந்தாதரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் வயது 19 என்பது தெரியவந்துள்ளது. 

இந்த விபத்துக் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை