சற்று முன்



ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிப்பில் ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது !

 

பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது.

ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது  .

மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர் , மற்றும் இது  பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும்  ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய  தயாரிப்பு  வரிசை தேர்வுகளை   விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க  சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான்  பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499   மட்டுமே உறுப்பினர்  சந்தா செலுத்துவதன் மூலம் கிடைக்கும். 

மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பை ஆண்டுக்கு ரூபாய் 599 மட்டுமே செலுத்தி வாங்கலாம் – இந்த ஒற்றைப் பயனர், மொபைல் ஒன்லி  வருடாந்திரத் திட்டம், பிரைம் வீடியோவின் உயர்தர பொழுதுபோக்கு மற்றும் நேரலை விளையாட்டுகளின் முழுப் பட்டியலுக்குமான அணுகலை வழங்குகிறது. 

மும்பை, இந்தியா—5 ஜனவரி, 2023— பிரைம் வீடியோ,  புதிய ஆண்டை ஒரு மிகப்பெரிய ஆரவாரத்துடன் தொடங்கும் வகையில், ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தனது ஒரிஜினல், ஃபார்ஸி, திரைப்படத்தை பிப்ரவரி 10 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படுவதை இன்று அறிவித்தது.

 மிகப்பெரிய வெற்றி கண்டு  சாதனை புரிந்த தி ஃபேமிலி மேன் ஐ உருவாக்கிய மிகப்பிரசித்திபெற்ற படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம்தான் ஃபார்ஸி. திரைப்படம். ராஜ் & DK இன் தயாரிப்பு நிறுவனமான  D2R ஃபிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட,  இந்த நட்சத்திரக்கூட்டம் நிறைந்த   தொடரானது  பாலிவுட்டின் மனம் கவர்ந்த ஷாஹித் கபூர் மற்றும் கோலிவுட்டின் மிகவும் அன்புக்குரிய நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’  விஜய் சேதுபதி ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகத்தைக் குறிக்கிறது.

இந்தத் தொடரில் ராஷி கண்ணா,  தேர்ந்த கலைஞரான கே கே மேனன், திரைக்குத் மீண்டும் திரும்பும் மூத்த நடிகர் அமோல் பலேகர், ஆகியோருடன் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புதுமுக நடிகர் புவன் அரோராவும்  முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குனர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது  எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது.  செல்வந்தர்களுக்கு  ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு  பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக்  கலைஞனை  சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது . அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான  ஒரு விறுவிறுப்பான  தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி  ஐ எழுதியுள்ளனர்.

ப்ரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ், தலைவரான அபர்ணா புரோஹித், கூறினார் “2023 ஆண்டின் துவக்கம்  இதைவிட சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை.  ஃபார்ஸி திரைப்படம் நடுத்தர மக்களின்  கனவுகள், அபிலாஷைகள் மற்றும் மனக்கலக்கம் நிறைந்த அவர்களின் வாழ்க்கைச்சூழலில் வேரூன்றிய உணர்வுகளோடு  விலா எலும்புகளை நோகவைக்குமளவுக்கு சிரித்து மகிழவைக்கும். எங்களோடு தங்களின் டிஜிட்டல் அறிமுகத்தை தொடங்க இருக்கும் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்றும் , இந்த க்ரைம் த்ரில்லர் சொல்லப்பட்டிருக்கும் விதம் இதுவரை சொல்லப்பட்டுவந்த வடிவங்களை மறுவரையறைக்கு உட்படுத்தும்.  இந்த சுதந்திரமான இரட்டையர்களோடுடனான எங்களின் வெற்றிகரமான, நீண்டகால ஒத்துழைப்புக்கு  ராஜ் & டிகே ஆகியோரால் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தொடர், கூடுதல்  வலுச்சேர்க்கிறது, மற்றும் பல்வகைக்கூறுகளோடுடனான திறன் தேர்வுகளில் அகில இந்திய அளவில் மனதைக் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது”  

படைப்பாளி  இரட்டையர்களான ராஜ் & டிகே கூறுகையில், “தி ஃபேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்! இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும்,  இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது  பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட  ஏற்ற தாழ்வுகளினூடே பயனித்துப்  படமாக்கியுள்ளோம். அடிப்படையில் இந்த தொடரின் உருவாக்கம் அதிகளவில் வியர்வையையும் கண்ணீரையும் சிந்த வைத்திருக்கிறது. தி ஃபேமிலி மேனுக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக்கொண்டோம். பிரைம் வீடியோவில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கும்  இந்தத் தொடரை பார்ப்பதற்காக நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.” . .

பிரைம் வீடியோ பட்டியலில் உள்ள ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் ஃபார்ஸியும் இணையும் . இதில் இந்திய தயாரிப்பான அமேசான் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களான,  மஜா மா, ஹஷ் ஹஷ், க்ராஷ் கோர்ஸ், பஞ்சாயத்து, மாடர்ன் லவ் ஹைதராபாத், சுழல் - தி வோர்டெக்ஸ், மாடர்ன் லவ் மும்பை, கில்டி மைண்ட்ஸ், மும்பை டைரிஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான், ப்ரீத் இண்டு தி ஷேடோஸ் பந்தீஷ் பாண்டிட்ஸ், பாதாள் லோக், மிர்சாபூர், தி ஃபார் ஃகாட்டன் ஆர்மி - ஆசாதி கே லியே, சான்ஸ் ஆஃப் தி சாயில்,: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மேட் இன் ஹெவன், மற்றும் இன்சைட் எட்ஜ்,  போன்றவை உட்பட , மற்றவற்றுக்கிடையில்  இந்தியத் திரைப்படங்களான  ஷேர்ஷா, சர்தார் உதம், கெஹ்ரையன், ஜல்சா, ஷெர்னி, டூஃபான், கூலி நம்பர். 1, குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, ஜெய் பீம், மாலிக், ஜோஜி, பொன்மகள் வந்தாள், சர்ப்பட்டா பரம்பரை, ஹோம், பிரெஞ்ச் பிரியாணி, சுஃபியும் சுஜாதாயும், நிசப்தம், மாரா, வி. , சியு சூரரைப் போற்று, பீம சேனா நல மஹாராஜா, திருஷ்யம் 2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடீஸ், புத்தம்புதுக் காலை,அன்பாஸ்ஸ்ட்i அண்ட் அன்பாஸ்ஸ்ட் ஆகியவை உட்பட  பல விருதுகளை வென்ற மற்றும் உலகளவில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட அமேசான் ஒரிஜினல்ஸ் திரைப்படங்களான தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் தி ரிங்ஸ் ஆஃப் பவர், டெர்மினல் லிஸ்ட் , ரீச்சர், சிண்ட்ரெல்லா, தி வீல் ஆஃப் டைம், போரட் சப்ஸிக்வெண்ட் மூவிஃபிலிம், தி டுமாரோ வார், வித்வுட் ரிமோர்ஸ், அப்லோட், டாம் க்ளான்சியின் ஜாக் ரையான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசல் ஆகியவையும் அடங்கும். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழித்திரைப்படங்கள் அடங்கும்.

கருத்துகள் இல்லை