செம்பி படம் விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து கொண்டு இருந்த இவர் சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் இந்த “செம்பி” என்ற திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
கோவை சரளா கொடைக்கானலில் புலியூரைச் சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் வீரத்தாயி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய 10 வயதுள்ள பேத்தி செம்பியுடன் தன்னுடைய வருகிறார். கொடைக்கானல் காட்டுப்பகுதிகளில் கிடைக்கும் தேனை விற்றுதான் வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் கொடைக்கானலை சுற்றி பார்க்க வந்த 3 பேரால் வீரத்தாயின் பேத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதனால் உடைந்து போன பாட்டி வீரத்தாயி அந்த குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுத்தார்? யார் அந்த குற்றவாளிகள்? என்பதுதான் மீதி கதை.
கோவை சாளரளாவை இப்படத்தில் முற்றிழும் தன்னுடைய உருவத்தை மாற்றி பழங்குடியின மக்களில் ஒருவராகவே தோன்றுகிறார். இவர் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கதாபாத்திரங்களில் நடித்த சாளரவின் ஒரு சில காட்சிகள் கலங்க வைப்பதாக இருக்கிறது. தன் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த மூவரை கண்டறிய கோவை சரளா படும் முயற்சி கஷ்டம் நம்மை கலங்க வைக்கின்றன.
அதேபோல செம்பியாக நடித்த நிலாவும் தன்னுடைய நடிப்பினால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். நிலாவின் நடிப்பு பிரமாதம்.
மேலும் அஸ்வின் ஹீரோயிசம் நன்றாக பொருந்தி உள்ளது. மிக யதார்த்தமான நடிப்பு அஸ்வின் நடித்துள்ளார். அஸ்வின் அவர்களுக்கு உதவும் காட்சிகள் பார்க்கும் நம்மை கலங்க வைத்தது.
நாஞ்சில் சம்பத், தம்பி ராமையா போன்றவர்கள் தங்களுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருந்தனர். உயர்த்த மலைகளில் இயற்கையோடு இயற்கையாக
வாழும் வீரத்தாயின் மூலம் நம்மை இயற்கையாக வேறு பரிமாணத்திற்க்கு கொண்டு சென்ற படக்குழு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் உருகவைக்கும் இசை, எதிர்த்தமான கதாபாத்திரங்கள் என இப்படத்தின் அணைத்து துறைகளிலும் தங்களுடைய முழு உழைப்பை அற்பணித்திருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது.
பேருந்தில் எடுக்கப்படும் காட்சிகள் “மைனா” படத்தை நினையூட்டுவதாக இருக்கிறது. ஆனாலும் படத்தில் கூறப்படும் வசனங்கள், ஒளிப்பதிவு, கோவை சரளாவின் நடிப்பு படத்திற்கு வலுவூட்டுகிறது. ஆக மொத்தம் செம்பி ஒரு போராளி தர்மம் வென்றது.
Rating : 3.5 /5
கருத்துகள் இல்லை