சற்று முன்



லத்தி திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பலம் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பது தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஏ. வினோத் இயக்கத்தில் நடிகர் விஷால் வெளியாகும் திரைப்படம் “லத்தி சார்ஜ்”. இப்படத்தை ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில் இப்படத்திற்க்கான ஆவல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருந்தது. தற்போது “லத்தி சார்ஜ்” படம் வெளியாகிய நிலையில் இப்படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த்தா? இல்லையா? என்பதை நாம் காணலாம்.

படத்தின் தொடக்கத்தில் ஒரு நாள் இரவு ஒருவன் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்திகிறான் என்று பெண் ஒருவர் விஷாலிடம் புகார் அளிக்கிறார். இதனால் அந்த பையனிடம் விசாரித்து எச்சரிக்கிறார் விஷால். இந்நிலையில் மறுநாள் அந்த பெண் கொடூரமாக முறையில் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதற்க்கு பிறகு அந்த பெண்ணை காதலிக்க வற்புறுத்திய பையனை விசாரணை செய்கின்றனர். இந்த நிலையில் அவன் தான் செய்யவில்லை என்றதும் விஷால் அவனை அடித்து உதைக்கிறார்.

இந்த நிலையில் அந்த பெண் வாக்குமூலம் கொடுத்து விட்டு இறந்து விடுகிறாள், ஆனால் அவர் சொன்ன அடையாளங்கள் அந்த பையனுடன் ஒத்து போகாத’காரணத்தினால் தவறு செய்ததாக விஷாலை 1 வருடம் பனி நீக்கம் செய்கிறார்கள். ஆனால் டிஜிபி பிரபுவின் சிவாரிசு பேரில் 6 மாதங்களிலேயே மீண்டும் காவல் பணிக்கு திருப்புகிறார். இந்த நிலையில் டிஜிபியின் மகளை அங்கு இருக்கும் பிரபல தாதா மகன் வெள்ளை தகாதவாறு நடந்து கொள்கிறார்.

இதற்கு பிறகு பிரபுவுடன் அவரது மகள் சொல்லியும் அவரால் எதுவும் செய்ய முடியாவில்லை இதனால் தாதாவின் மகன் வெள்ளையை எப்படியாவது அடித்து காலை உடைக்க வேண்டும் என்று வெள்ளையை யாரும் இல்லாத இடத்திற்கு கடத்தி லத்தி ஸ்பெசலிஸ்டான விஷாலை கொண்டு அடித்து உதைக்கிறார். என்னதான் முகத்தில் மறைத்து அடித்தாலும் விஷுலின் முகத்தை வெள்ளை பார்த்து விடுகிறார். இதற்கு பிறகு விஷால் குடும்பத்தை தேடி வெள்ளை என்ற பெரிய தாதாவின் மகனிடம் இருந்து சாதாரண கான்ஸ்டபிளான விஷால் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

விஷால் படம் என்று வைத்துக்கொண்டால் ஆக்ஷன் அதிகமாக காணப்படும் அது இப்படத்தில் உள்ளது. முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி ஆக்ஷன் கட்சிகளின் மூலம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர் ஏ.வினோத் குமார். நடிகர் விஷானின் நடிப்பு நன்றாக இருந்தாலும் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. கதாநாயகியான சுனைனா மற்றும் பிரபு, மற்றும் சக நடிகர்கள் தங்களுடன் கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கின்றனர். விஷாலின் மகனாக நடித்த சிறுவன் நடிப்பு நன்றாக இருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் பாசத்தை கூட்டி இருந்தது. தனது மகன் வில்லன்களிடம் இருந்து மகனைக் காப்பாற்ற செய்யும் காட்சிகள் விஷால் அற்புதமாக செய்துள்ளார்.

 இப்படத்தில் வில்லனாக நடித்தவரின் நடிப்பு பிரமாதம் தான். இசையமைப்பாளர் யுவன் சங்கரின் இசை மாஸ் ஆனால் பின்னணி இசை பிரமாதம். மேலும் படத்தின் ஒளிப்பதிவில் பாலசுப்ரமணியம் அசத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை