சற்று முன்



மதுரை மகாத்மா காந்தி மாண்ட சரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான அறிவியல் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது !

 

மதுரை மகாத்மா காந்தி மாண்ட சரி பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கான அறிவியல் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அறிவியல் விஞ்ஞானி மாரியப்பன் தனியார் பத்திரிகை நிருபர் சக்ஸ்மா ஆகியோர் நீதிபதியாக கலந்து கொண்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசளித்தனர் இந்த கண்காட்சியில் புதுவை மாநிலம் காரைக்கால் குட்ஷெப்பட்  ஆங்கில பள்ளியின்  தாளாளர் ரான்சன் தாமஸ் முதல்வர் ஜாய் தாமஸ் அவர்களின் ஊக்கத்தில் இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ  விசாகன்  மற்றும் ஸ்ரீ ஹரிணி அவர்கள் மதுரையில் மகாத்மா  சிபிஎஸ்சி பள்ளியில் மண்டல அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்களின் அறிவியல் படைப்பான வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கான அலாரம் மற்றும் தானே இயங்கி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கும் கண்டுபிடிப்பை விளக்கத்தை எடுத்துக் கூறினார் இக்கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை